ஏழைகளுக்கு எப்போதும் சேவை செய்வேன்: சமந்தா

Bookmark and Share

ஏழைகளுக்கு எப்போதும் சேவை செய்வேன்: சமந்தா

சமந்தா தமிழில் விஜய்யுடன் 'தெறி', சூர்யாவுடன் '24', தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் 'பிரமோற்சவம்' என்று தமிழ்–தெலுங்கில் 'பிசி'யாக நடித்து வருகிறார். அதே நேரத்தில் சமூக சேவையிலும் ஆர்வமுடன் இருக்கிறார்.

இதுபற்றி கூறிய சமந்தா.... 

"நான் முழு நேரமும் சமூக சேவை செய்ய விரும்புகிறேன். ஏழை மக்களுக்கு உதவ ஆசைப்படுகிறேன். அவர்களுக்கு உதவ எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது கடவுள் எனக்குத் தந்த கொடை.

ஒருமுறை நான் முழுநேர சமூக சேவை செய்வதற்காக சினிமாவை விட்டு போய் விட நினைத்தேன். ஆனால் சினிமாவால்தான் பணமும், பிறருக்கு உதவ வாய்ப்பும், திறமையும் எனக்கு கிடைக்கிறது. நான் எனது திரைப்பட தொழிலை நேசிக்கிறேன். சினிமா மீது எனக்கு இருக்கும் அன்புக்கும் முடிவு இல்லை. இது எனது வாழ்க்கை. 

இதன் மூலம் மகிழ்ச்சியும் நிறைவும் பெறுகிறேன். திரைப்பட தொழில் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் சமூக சேவை செய்வதும், மக்களுக்கு உதவுவதும் முக்கியம். ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளையும் செய்து வருகிறேன்.

திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் எனக்கு எல்லா வசதிகளும் கிடைக்கிறது. எனவே சினிமாவில் இருந்தாலும் சேவை செய்து சமூக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.


Post your comment





Related News
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions