ரெய்டில் பணம் பற்றி வாயைத்திறக்காத சமந்தா!

Bookmark and Share

ரெய்டில் பணம் பற்றி வாயைத்திறக்காத சமந்தா!

ஆங்காங்கே பதுக்கி வைத்திருக்கப்படும் கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு ஒரு அதிரடி முடிவெடுத்தது. அதில் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் தாமாகவே முன்வந்து தங்களிடம் உள்ள கருப்பு பணம் குறித்த விவரத்தை தெரிவித்து, அதற்கான தகுந்த வரியைச் செலுத்தினால் அவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டது எனக்கூறி 3 மாத காலகெடுவும் அளித்தது.

காலகெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், இன்று காலை ஒரே நேரத்தில் திரையுலகைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் (விஜய், நயன்தாரா, சமந்தா, புலி படக்குழுவினரின் வீடுகள் என மொத்தம் 32 இடங்களில்) வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை பல்லாவரத்தில் உள்ள சமந்தாவின் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். தற்போது சமந்தா படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளார்.

இந்த சோதனை குறித்து சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு கூறுகையில், “கருப்பு பணத்திற்கும் எனது மகளுக்கும் சம்பந்தமில்லை. உரிய வருமான வரிகளை சமந்தா கட்டி வருகிறார். அவர் வரி ஏய்ப்பு ஏதும் செய்யவில்லை. சமந்தா வெளிநாட்டில் இருக்கிறார். அவர் பணம் பற்றி என்னிடம் எதுவும் கூற மாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions