மீண்டும் சமந்தாவின் தெலுங்கு பிரவேசம்

Bookmark and Share

மீண்டும் சமந்தாவின் தெலுங்கு பிரவேசம்

சிறிய கதாபாத்திரத்தில் தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்த சமந்தா, பின்னர் பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரிஆகிய படங்களில் நாயகியாக நடித்தார்.

கதாநாயகியாக நடித்த சமந்தாவின் ஆரம்ப காலப் படங்கள் சரியாகப் போகவில்லை. விண்ணைத் தாண்டி வருவாயாபடத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக நடித்தார் சமந்தா.

அந்தப் படம் அங்கு பெரிய வெற்றி பெறவே தொடர்ந்து தெலுங்குக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார்.  தமிழில் யாரும் நடிக்க அழைக்கவில்லை.

 இரண்டு வருடங்கள் கழித்து அவர் நடித்து வெளிவந்த ‘நான் ஈ’ படம் வெற்றி பெறவே மீண்டும் தமிழில் வலம் வர ஆரம்பித்தார்.  விஜய் ஜோடியாக நடித்த கத்தி  மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.  

தற்போது தமிழில் 10 எண்றதுக்குள்ள, விஐபி 2,  24, விஜய்யின் புதிய படம்,  வட சென்னை என பல படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் .  தமிழில் முன்னணி நடிகர்களுடன் நிறைய படங்களில் நடித்ததால் தெலுங்கில் வேறு எந்த புதிய படத்திலும் நடிக்காமல் இருந்தார் சமந்தா.

எனினும், தெலுங்கில் அவருடைய அபிமான இயக்குனரான த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் நிதின் ஜோடியாக நடிக்க அழைப்பு வந்ததும் அதற்கு உடனே சம்மதித்து விட்டார்.

அதோடு, மகேஷ் பாபு ஜோடியாக பிரம்மோற்சவம் படத்திலும் நடிக்க உள்ளார்.  இந்தப் படங்கள் அடுத்த ஆண்டுதான் வெளியாகும். அதுவரை தெலுங்கு ரசிகர்கள் சமந்தா நடித்து வெளியாக உள்ள தமிழ்ப் படங்களின் தெலுங்கு டப்பிங்கைப் பார்த்து ஆறுதல்பட்டுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions