சமந்தாவை கோபப்படுத்தி, அழ வைத்த அடா ஷர்மா.?!

Bookmark and Share

சமந்தாவை கோபப்படுத்தி, அழ வைத்த அடா ஷர்மா.?!

சமந்தா சில நட்களுக்கு முன் அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் “சமயங்களில் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என கட்டுப்படுத்த முடியாமல் கோபத்தைத் தூண்டுகிறது,” என பதிவு ஒன்றைப் போட்டிருந்தார்.

அது குறித்து நாமும் சமந்தாவை கோப்ப்படுத்தியது யார் ? என்று செய்தி வெளியிட்டிருந்தோம். அப்படி சமந்தாவை கோபப்படுத்தியது யார் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், சமந்தா ஜோடியாக நடிக்கும் படத்தில் அடா ஷர்மாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கான பாடல் சில நாட்களுக்கு முன் படமாக்கப்பட்டுள்ளது.

அப்போது சமந்தா, அடா ஷர்மாவிடம் ஒரு ஜோக் ஒன்றைச் சொல்லியிருக்கிறார். அது பிடிக்காத அடா, சத்தமாக சமந்தாவைப் பற்றி ஒரு கமெண்ட் அடித்திருக்கிறார். அதைக் கேட்டதும் மொத்த யூனிட்டும் அதிர்ச்சியடைந்து சைலன்டாகியிருக்கிறார்கள். சமந்தா கண்ணீர் விட்டு அழுதே விட்டாராம். உடனே, இயக்குனர் த்ரிவிக்ரம் அடாவை, சமந்தாவிடம் மன்னிப்பு கேள் என்று சொன்னாராம்.

ஆனால், நான் சொன்னது உண்மைதான் அதற்கெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்ல, அடாவை செட்டை விட்டு இயக்குனர் த்ரிவிக்ரம் வெளியேறச் சொல்லியிருக்கிறார்.

இந்த விவகாரத்தைக் குறித்துத்தான் சமந்தா சில நாட்களுக்கு முன் டிவிட்டரில் அப்படி ஒரு பதிவைப் போட்டிருக்கிறார் போலிருக்கிறது என்று டோலிவுட்டில் இப்போது பரபரப்பாக பேசி வருகிறார்கள். அடாவுக்கு சமந்தா மேல் அப்படி என்ன கோபமோ...?


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
சகநடிகரை காலணியால் தாக்கிய டிவி நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions