சண்டையில் காயம் அடைந்த சமந்தா

Bookmark and Share

சண்டையில் காயம் அடைந்த சமந்தா

சமந்தா தற்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறார். சமீபத்தில் அவர் நாயகியாக நடித்து வெளிவந்த சன் ஆப் சத்தியமூர்த்தி தெலுங்குப் படம் ரசிகர்களின் வரவேற்புடன் அமோகமாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

முதலில் இந்தப் படத்திற்கு வெளிவந்த சில விமர்சனங்கள் படத்தைப் பாதிக்குமோ என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், ரசிகர்கள் படத்தை நன்றாக வரவேற்று விட்டதால் படம் ஹிட் வரிசையில் சேர்ந்துவிட்டதாம்.

இந்தப் படத்திற்கடுத்து சமந்தாவிற்கு கைவசம் வேறு எந்த தெலுங்குப் படமும் இதுவரை ஒப்பந்தமாகவில்லை. தற்போது விக்ரம் ஜோடியாக சமந்தா நாயகியாக நடித்து வரும் 10 எண்றதுக்குள்ளே படத்தின் சண்டைக் காட்சிகள் சில நாட்களுக்கு முன் நேபாள நாட்டில் படமாக்கப்பட்டதாம். அப்போது டூப் இல்லாமல் சமந்தாவே சண்டைக் காட்சியில் நடித்துள்ளார்.

அப்போது அவரது வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்துக் கொடுத்திருக்கிறார். இது குறித்து சமந்தா, “இது போன்ற சில காயங்களால் வடுக்கள் ஏற்படத்தான் செய்யும்.

வலி இல்லாமல் எதையும் பெற முடியாது,” எனக் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தையடுத்து சமந்தா, தனுஷ் ஜோடியாக ஒரு படத்திலும், சூர்யா ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

விஜய்யின் அடுத்த படத்திலும் சமந்தா தான் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சண்டைன்னா காயம் படத்தான் செய்யும்...! சண்டையில் கிழியாத சட்டையேது.?!!


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions