27வது பிறந்த நாளைக் கொண்டாடும் சமந்தா...

Bookmark and Share

27வது பிறந்த நாளைக் கொண்டாடும் சமந்தா...

சினிமாவில் முதலில் தோல்வியை ருசிப்பவர்கள்தான் பின்னர் நல்லதொரு வெற்றியைப் பெற்று முன்னணிக்கு வருகிறார்கள். இது பலருக்கும் பொருந்தும் ஒரு விஷயமாக அமைந்திருக்கிறது.

இன்று தெலுங்கிலும், தமிழிலும் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவிற்கு தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமான போது பெரிய வரவேற்பு இல்லை. அவர் நாயகியாக அறிமுகமான  'பாணா காத்தாடி', அடுத்து வெளிவந்த 'மாஸ்கோவின் காவிரி' ஆகிய படங்கள் அவருக்குத் தோல்விப் படங்களாகவே அமைந்தன.

அடுத்து தமிழ், தெலுங்கில் தயாராகி 2012ல் வெளிவந்த 'நான் ஈ' படம் வெற்றி பெற்ற பிறகுதான் தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் பார்வை சமந்தா பக்கம் திரும்பியது.

அதைத் தொடர்ந்து அவர் நடித்து வெளிவந்த 'நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான்' ஆகிய படங்கள் மீண்டும் தோல்வியடைய சமந்தாவின் தமிழ்த் திரையுலக மார்க்கெட் கொஞ்சம் ஆட்டம் கண்டது.

ஆனாலும், விஜய் ஜோடியாக சமந்தா நடித்து வெளிவந்த 'கத்தி' படம் அவரை மீண்டும் காப்பாற்றியது. இடையில் நிறைய தெலுங்குப் படங்களில் நடித்து, அதில் பல படங்கள் வெற்றியடைய சமந்தா தெலுங்கின் முன்னணி ஹீரோயினாக மாறினார்.

தெலுங்கு ரசிகர்கள் சமந்தாவை தங்களது அபிமான நாயகிகளில் ஒருவராக கொண்டாட ஆரம்பித்தனர். சமீபத்தில் வெளிவந்த 'சன் ஆப் சத்தியமூர்த்தி' படம் வரை அவரது வெற்றி ராசி தெலுங்கில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தற்போது தமிழில் விக்ரம் ஜோடியாக '10 எண்றதுக்குள்ளே', சூர்யா ஜோடியாக '24', தனுஷ் ஜோடியாக பெயரிடப்படாத படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இன்று தன்னுடைய 27வது பிறந்த நாளைக் கொண்டாடும் சமந்தா, இந்த ஆண்டில் தமிழிலும் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

 


Post your comment





Related News
ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்
டாப் 5 லிஸ்டில் இடம் பெற்ற விஜய்! பிரம்மிக்க வைத்த விசயம்
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
பின்னி பெடலெடுங்க சார், அஜித்திற்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
தல பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
"பாகுபலி போன்ற படத்தை எடுக்கமாட்டேன்.." சொல்வது ஆஸ்கர் விருது வென்ற பிரபலம்
கடந்த வருடம் அப்படி, இந்த வருடம் இப்படி, அடுத்த வருடம் அஜித் பிறந்தநாளுக்கு எப்படி இருக்குமோ?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions