2016..ல் கதற..கதற..நடித்த ..கனவுக்கன்னிகள்..! எத்தனை கோடிகள்..ஆத்தீ..!?

Bookmark and Share

2016..ல் கதற..கதற..நடித்த ..கனவுக்கன்னிகள்..! எத்தனை கோடிகள்..ஆத்தீ..!?

பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள் நம்ப பவர் புல் ஹீரோயின்கள்..! பல கோடிகள் சம்பளம். இரவு பகலாக பறந்து பறந்து நடித்தார்கள். பல மொழிப்  படங்களில்.
எப்படிப்பார்த்தாலும்..எத்தனை கீர்த்திகள் வந்தாலும், நயனின் கீர்த்திதான் நம்பர் ஒன். டாப் லிஸ்ட்டில் நயனே நம்பர் ஒன்..மீதியைப் பாருங்கள்..!

மஞ்சிமா மோகன், மடோனா செபஸ்டியன் என்று சில ஹீரோயின்கள் அறிமுகமானாலும் அவர்கள் யாரும் டாப் 5 க்குள் வரவில்லை. 2016ன் இறுதியில் ஹீரோயின்களை இந்த ஆண்டு படங்கள் அடிப்படையில் பட்டியலிட்டோம்.

நயன்தாரா

டெஸ்ட் போட்டிகளில் களம் இறங்கும் டிராவிட், லக்‌ஷ்மண் போன்ற பேட்ஸ்மேன்கள் போல நிலைத்து நின்று இன்னும் அசத்திக்கொண்டிருக்கிறார் நயன்தாரா. அடிக்கடி காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும் அழகு மயிலாகவே வலம் வருவது சிறப்பு.

அதிலும் ஹீரோக்களுக்கு போட்டியாக லீட் ரோல்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் இளம் ஹீரோக்களுக்கும் ஆல்டைம் ஃபேவரிட் நயன் தான். ரஜினியில் இருந்து விஜய்சேதுபதி வரை யாருக்கு ஜோடி போட்டாலும் அட… இந்த ஜோடி சூப்பர் என்று சொல்ல வைத்துவிடுவது நயனின் ஸ்பெஷல்.

அதையும் தாண்டி நயனுக்கென்று தனி மார்க்கெட்டே உருவாகிவிட்டது. அதுதான் மூன்று கோடியைத் தாண்டினாலும் நயனை நோக்கி தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் ஹீரோக்களையும் ஓடவைக்கிறது.

கீர்த்தி சுரேஷ்

எல்லா காலகட்டத்திலும் திடீரென எண்ட்ரி ஆகி ஒரு கதாநாயகி முன்னணி ஹீரோயின்களுக்கே டஃப் ஃபைட் கொடுப்பார். அதில் இந்த சீஸனுக்கு கீர்த்தி சுரேஷ். தமிழில் அறிமுகமான ‘இது என்ன மாயம்’ பெரிதாக போகவில்லை.

ஆனால், அடுத்த படமான ரஜினிமுருகன் வெளியாவதற்குள்ளாகவே விஜய் படத்தில் கமிட் ஆகிவிட்டார்.
அதற்கு அடுத்து இப்போதே சூர்யா, விஜய் சேதுபதி என முன்னணி ஹீரோக்களுக்கு மேடம்தான் ஜோடி.
ஆரம்ப கால நயனை அப்படியே நினைவுபடுத்துவதால் நயனின் இடம் கீர்த்தி சுரேஷுக்குதான் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

சமந்தா

திருமணமாகப் போகும் பெண் ஒரு குழப்பத்தில் இருப்பாரே அது போன்றதொரு குழப்பத்தில்தான் இருக்கிறார் சமந்தா.
நாக சைதன்யாவுடன் திருமணம் என்று உறுதியான செய்திகளே வந்துவிட்டன. ஆனாலும் சமந்தாவை கமிட் பண்ண அலைகிறது தமிழ் சினிமா.

வடசென்னையில் தேடி வந்த வாய்ப்பை உதறியவர், அடுத்து நடிக்கவிருப்பது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக.
அடுத்த ஆண்டு மத்தியில் தான் திருமணம். அதுவரை சமந்தா தான் மூன்றாவது ரேங்கில் இருப்பார்.

தமன்னா

இந்த வெள்ளை தேவதை இப்போதுதான் சரியான பாதைக்கு வந்திருக்கிறது. பாகுபலி தந்த தைரியம் இது. விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்த தர்மதுரையில் நல்ல பெயர்.
கேரியர் அவ்வளவுதான் என்று எல்லோரும் நினைத்த நேரத்தில் பெர்ஃபார்மென்ஸில் கவனம் செலுத்தி முன்னணியிலேயே நீடிக்கிறார்.

காஜல் அகர்வால்

இந்தி, தெலுங்கு என ஒரு ரவுண்டு அடித்துவிட்டு திரும்ப தமிழுக்கே வந்து அஜித்துக்கு ஜோடியாகி இருக்கிறார். விஜய்யின் அடுத்த படத்திலும் காஜல் தான் ஹீரோயின்.
பத்து ஆண்டுகள் தாண்டியும் அதே குறும்புத்தனத்தை மெய்ண்டெய்ன் பண்ணுவது சிறப்பு. அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தமாகி விட்டார்.

ஸ்ரீதிவ்யா

ஒரே ஒரு ஊதா கலர் ரிப்பனில் தமிழ் சினிமாவைக் கட்டிப் போட்டவர். ஜீவா, கார்த்தி, விஷ்ணு விஷால் என இளம் ஹீரோக்களுடன்தான் நடித்துக்கொண்டிருக்கிறார்.
கிராமத்து லுக்கில் அசரடித்தவர். நகரத்து தோற்றத்துக்கும் பொருந்துவது ஆச்சர்யம். இன்னும் விஜய், அஜித், சூர்யா போன்ற பெரிய நடிகர்களின் பார்வையில் படவில்லை. மிக இளம் வயது என்பதால் நிலைத்து நிற்க வாய்ப்பு அதிகம்.

ஏமி ஜாக்ஸன்

போன ஆண்டு உதயநிதிக்கு ஜோடியாக நடித்தவர் இந்த ஆண்டு ரஜினிக்கே ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
கிளாமரில் பிச்சு உதறுவதால் பெரிய இயக்குநர்களே இவரை டிக் அடிக்கிறார்கள். தமிழுக்கு பொருந்தாத முகமாக இருந்தாலும் அதனை அழகாக மேட்ச் செய்ய முயற்சிப்பதே அழகுதான்.

ஸ்ருதிஹாசன்
கமல் வாரிசாக இருந்தாலும் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். 3 படத்தில் ஸ்ருதிஹாசன் பெர்ஃபார்மென்ஸைப் பார்த்து ஆச்சர்யப்பட்டது தமிழ் சினிமாவே…

சூர்யாவுக்கு ஜோடியாக எஸ்3 யில் நடிக்கிறார். அப்பாவுடன் சபாஷ் நாயுடு படத்திலும் தெலுங்கு பிரேமம் படத்திலும் பிஸி.
நிக்கி கல்ராணி

அறிமுகமான டார்லிங் முதல் இந்த ஆண்டின் மெகா ஹிட்டான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ வரை எல்லாவற்றிலும் சார்மிங் லுக்குக்காகவே ரசிக்கப்பட்டவர் நிக்கி கல்ராணி.  இரண்டு படங்கள் கையில் இருக்கின்றன.

மஞ்சிமா மோகன்

ஒரே படம் தான். அதற்குள் இளம் ஹீரோக்களின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயின் மஞ்சிமாதான்.
தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தது போல கொஞ்சம் புஷ்டியாகவும் இருக்கிறார். சின்ன சின்ன ரியாக்‌ஷன்களால் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை அழகாக்கினார்.

இவர்கள் தவிர ஹன்சிகா, நித்யாமேனன், கேதரின் தெரசா, ஆனந்தி, லட்சுமிமேனன், மடோனா செபஸ்டியன் ஆகியோரும் இருக்கிறார்கள்.
இவர்கள் எல்லோருமே ஆளுக்கொரு படத்தை கையில் வைத்துக்கொண்டு வாழ்வா சாவா என்ற நிலையில் இருக்கிறார்கள்.


Post your comment

Related News
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions