கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமியுடன் இணையும் சமந்தாவின் காதலர்

Bookmark and Share

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமியுடன் இணையும் சமந்தாவின் காதலர்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடித்து வெளியான `துருவங்கள் பதினாறு' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 21 வயதே ஆன இளம் இயக்குநரின் முதல் படமான `துருவங்கள் பதினாறு' முற்றிலும் மாறுபட்ட கதை களத்தில் 50  நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், `துருவங்கள் பதினாறு' படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் `நரகாசுரன்' என்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை  இயக்க உள்ளார். 

இப்படத்தில் தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவின் முக்கிய நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக முன்னதாக கார்த்திக் நரேன் அறிவித்திருந்தார். 

அதனைத்தொடர்ந்து தமிழ் சினிமா சார்பில் நடிகர் அரவிந்த்சாமி இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினார். அவரைத்தொடர்ந்து மற்ற  நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்று வரும் நிலையில், சமந்தாவின் வருங்கால கணவரான நாக சைதன்யா `நரகாசுரன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாக சைதன்யா அறிமுகமாகும் முதல் நேரடி தமிழ் படம் இது  என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக `விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு பதிப்பில் நாக சைதன்யா  நடித்திருந்தார். 

மலையாள நடிகர் யார் நடிக்க உள்ளார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
கூகுள் பார்த்து சினிமாவை கற்றுக்கொண்டேன்: இயக்குனர் கார்த்திக் நரேன்
இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் சாதனை!
பிரபல மலையாள நடிகருக்கு திரையிடப்பட்ட துருவங்கள் பதினாறு படம்
இளம் இயக்குனரை தொலைபேசியில் பாராட்டிய இளையதளபதி விஜய்
துருவங்கள் 16 படத்தில் நடித்தவரின் பின்னனி என்ன தெரியுமா?
சர்ச்சை டுவிட்டிற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக் நரேன்
டி 16 பட இயக்குனரை பிளாக் செய்த சு. சாமி: அதுக்குள்ள பயந்தா எப்படி என நரேன் கிண்டல்
கமலுக்கு முதுகெலும்பு இல்லை உங்களுக்கு மூளையில்லையா?: சு. சாமியை விளாசும் ரசிகர்கள்
சிம்புவின் அடுத்த படத்தை இவர் இயக்குகிறாரா?
மோடியை சந்திக்காமல் சென்னை திரும்பிய விஷால்- என்னதான் நடந்தது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions