மீண்டும் மகேஷ் பாபுவுடன் ஜோடி சேரும் சமந்தா

Bookmark and Share

மீண்டும் மகேஷ் பாபுவுடன் ஜோடி சேரும் சமந்தா

டோலிவுட்டின் பிரின்சஸ் மகேஷ் பாபுவுடன் நடிகை சமந்தா டூகுடு, சீதம்மா வைகட்டுலு சிரிமல்லி செட்டு எனும் இரண்டு வெற்றிப் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக சமந்தா, மகேஷ் பாபுவுடன் ஜோடி சேரவுள்ளதாக கூறப்படுகின்றது.

மகேஷ் பாபு  ஸ்ரீமந்துடு படத்திற்கு பின்னர் இயக்குநர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில்  பிரமோற்சவம் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழிலும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நாயகிகளாக ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் ப்ரணிதா சுபாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மூன்று நாயகிகள் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட இப்படத்தில் தற்போது சமந்தா, மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் ராகுல் ப்ரீத்தி சிங் இரண்டாவது நாயகியாக நடிக்கக் கூடும் என தெரிகிறது. இப்படத்தில் பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நடிகர் மகேஷ் பாபுவும் இணைந்து தயாரிக்கின்றார். இசையமைப்பாளர் மிக்கி ஜெ மேயர் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இப்படத்தை இவ்வருட இறுதியில் டிசம்பர் மாதம் திரையிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 


Post your comment





Related News
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions