மீண்டும் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சமந்தாவின் காதலர்!

Bookmark and Share

மீண்டும் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சமந்தாவின் காதலர்!

ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் இளைஞர்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் படம் மெட்ரோ. அண்மையில் வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சங்கிலி பறிப்பு பற்றிய தகவல்களை கமர்ஷியல் அம்சங்களுடன் சுவாரஸ்யமாக கூறியதால் வெகுஜன ரசிகர்கள் வரை இப்படம் சென்றடைந்தது. விரைவில் இப்படம் தெலுங்கில் ரீமேக்காகவுள்ளது.

இதில் ஹீரோவாக சமந்தாவின் காதலர் என கூறப்படும் நாக சைதன்யா நடிப்பார் என சொல்லப்படுகிறது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் இவர்தான் ஹீரோவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions