திருமணத்துக்கு பின் பெயரை மாற்றுகிறார் நடிகை சமந்தா

Bookmark and Share

திருமணத்துக்கு பின் பெயரை மாற்றுகிறார் நடிகை சமந்தா

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா திருமணத்துக்கு தயாராகிறார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர். இருவரும் தற்போது ஐதராபாத்தில் ஒரே வீட்டில் தங்கி உள்ளனர்.

நாகார்ஜுனா குடும்பத்தினர் அனைவரும் தங்கள் பெயருடன் அக்கினேனி என்ற பெயரை சேர்த்து உள்ளனர். அக்கினேனி என்பது அவர்களின் பரம்பரை குடும்ப பெயர் ஆகும். நாகார்ஜுனாவை நடிகை அமலா திருமணம் செய்ததும் தனது பெயரை அமலா அக்கினேனி என்று மாற்றிக்கொண்டார்.

அதுபோல் நாக சைதன்யாவை மணந்த பிறகு சமந்தாவும் தனது சமந்தா ருத் பிரபு என்ற பெயரை சமந்தா அக்கினேனி என்று மாற்றிக்கொள்ள முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சினிமா வாழ்க்கை குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-

“வாழ்க்கையில் எனக்கு எல்லாமே கஷ்டப்படாமல் கிடைத்து விட்டன. சிறு வயதில் தினமும் புதிதுபுதிதாக இருக்க ஆசைப்படுவேன். சினிமாவுக்கு வந்த பிறகு அது அப்படியே நடக்கிறது. ஒவ்வொரு நாளும் புதுசாய் வாழ்கிறேன். நடிகையாக அறிமுகமான ஆரம்பம் சாதாரணமாகத்தான் இருந்தது. அதன்பிறகு வாழ்க்கை மாறிவிட்டது.

நான் வந்த பாதையை இப்போது திரும்பி பார்த்தால் எனது வாழ்க்கை எனக்கே ஆச்சரியத்தை தருகிறது. ஏதோ மாயம் நடந்தது போல் உணர்கிறேன். சினிமாவுக்கு வந்து 6 வருடங்கள் ஆகிவிட்டது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை இளம் நடிகையாக இருந்த நான் இப்போது சீனியர் நடிகையாகி விட்டேன். இதனால் எனக்கு பொறுப்புகள் அதிகரித்து விட்டன. முன்பு போல் எல்லா படங்களிலும் நடிக்க விரும்பவில்லை. நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்து இருக்கிறேன்.”

இவ்வாறு சமந்தா கூறினார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions