ரஜினி வசனத்தை பின்பற்றும் சமந்தா

Bookmark and Share

ரஜினி வசனத்தை பின்பற்றும் சமந்தா

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருபவர் சமந்தா. தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறார். தனது சாதனை குறித்து சமந்தா சொல்கிறார்...

‘ஆரம்பத்தில் இருந்தே என் வழியே தனி தான். ஏதாவது நினைத்தால் அதை செய்து முடிக்கும் வரை ஓயவே மாட்டேன். எனக்குள் பிடிவாதமும் நினைத்ததை செய்து முடித்து விட வேண்டும் என்னும் வெறியும் அதிகம். இன்னும் நிறைய திறமையை காட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.

சின்ன வயதில் இருந்தே நான் அப்படித்தான். எனது இந்த லட்சியம்தான் என்னை சினிமாவில் இந்த அளவுக்கு வளர்த்து விட்டது. எனக்கு நேர்ந்த எத்தனையோ சவால்களை சமாளித்து விட்டேன். அதற்கு என் திறமையை வெளிப்படுத்தி பதில் கொடுத்தேன்.

ரசிகர்களை இன்னும் அதிகமாக திருப்திபடுத்த வேண்டும். அதற்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே இப்போது எனது லட்சியம்’ என்றார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions