சமந்தா, சித்தார்த் தொடரும் நட்பு...!

Bookmark and Share

சமந்தா, சித்தார்த் தொடரும் நட்பு...!

சமந்தா, சித்தார்த் இருவரும் பிரிந்து விட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து சமந்தாவும் அது எங்களது தனிப்பட்ட விஷயம், அத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்றெல்லாம் 'டிவீட்' செய்தார்.

தெலுங்கு மீடியாக்களில் பரவ ஆரம்பித்த அந்தச் செய்தி அப்படியே தமிழ் மீடியாக்களுக்கும் பரவியது. இரு வருடங்களாகவே இருவரும் காதலித்து வந்தார்கள், பல விழாக்களில் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள். சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்றாலும் சமந்தா அவரைத் தீவிரமாகக் காதலித்து வந்தார் என்றே சொல்லப்பட்டது.

இதனிடையே சமந்தா நடந்து கொள்ளும் விதம் சித்தார்த்துக்கு பிடிக்கவில்லையென்றும், படங்களிலும் விழாக்களிலும் அவர் ஆடை அணிந்து வரும் விதம் அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது என்றும் தெலுங்கு மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டன.

பத்து நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்ற நாகேஸ்வரராவ் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சமந்தா, முதுகு முழுமையாகத் தெரியும் அளவிற்கு ஒரு மேலாடை அணிந்து வந்தது பரபரப்பான செய்தியாகப் பரவியது.

அந்த விவகாரம்தான் அவர்களிருவருக்கும் மோதலை அதிகமாக்கியது என்கிறார்கள்.சமந்தா, சித்தார்த் இருவரும் பிரிந்தனர் என்று செய்தி வெளியான பின்னும் சித்தார்த் மிகச் சிறந்த மனிதர் என்று அவருக்கு சமந்தா சான்றிதழ் வழங்கினார்.

நேற்று சித்தார்த் நடித்த 'எனக்குள் ஒருவன்' படத்தின் டிரைலர் யு டியூபில் வெளியானது. அதை சமந்தாவும் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, “காத்திருக்க முடியவில்லை...அற்புதம்” என டிரைலரைப் பற்றி கமெண்ட் ஒன்றைப் போட்டிருந்தார்.

ஆனால், சித்தார்த்தோ, “என்னுடைய இருண்ட நேரத்தில் கடவுள் ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார்,” என பதிவிட்டு அந்த டிரைலரை ஷேர் செய்திருக்கிறார். அவர் திரையுலக வாழ்க்கையைப் பற்றி அப்படி சொல்லியிருக்கிறாரா...அல்லது அவருடைய காதல் வாழ்க்கையைப் பற்றி சொல்லியிருக்கிறாரா என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions