பெரிய நடிகராக உயர்ந்தாலும் சிவகார்த்திகேயன் எளிமையானவர் :சமந்தா

Bookmark and Share

பெரிய நடிகராக உயர்ந்தாலும் சிவகார்த்திகேயன் எளிமையானவர் :சமந்தா

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளவர் சிவகார்த்திகேயன். தமிழில் வெற்றி பெற்ற சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்தை தெலுங்கில் ‘டப்பிங்’ செய்துள்ளனர். விரைவில் அங்கு இந்த படம் திரைக்கு வருகிறது. 

இதையொட்டி ‘ரெமோ’ படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது.இதில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

விழாவில் சமந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசும் போது ''நான் நடிக்க வந்ததில் இருந்து ஒரு ஸ்டார் சூப்பர் ஸ்டார் ஆனதை பார்க்கவில்லை. இப்போது சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டார் ஆகி இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவர் பெரிய நடிகராக உயர்ந்தாலும் எளிமையானவர், இனிமையானவர். அதனால்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். ‘ரெமோ’ தெலுங்கு டப்பிங் படம் போல் தெரியவில்லை” என்றார்.

சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் தெலுங்கில் ‘ரீமேக்’ செய்யப்பட்டுள்ளது. அவர் நடித்த படத்தை தெலுங்கில் ‘டப்பிங்’ செய்து வெளியிடுவது இதுதான் முதல் முறை.

தற்போது தமிழ் படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’வை தெலுங்கில் ‘டப்பிங்’ செய்து வெளியிடுவதன் மூலம் இவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை வாங்கி இருக்கிறார். அவர் ‘ரெமோ’வை அதிக அளவில் விளம்பரப்படுத்தி வருகிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions