சூர்யாவுடன் மீண்டும் சமந்தா

Bookmark and Share

சூர்யாவுடன் மீண்டும் சமந்தா

‘அஞ்சான்’ படத்தில் சூர்யா ஜோடியாக நடித்திருந்தார் சமந்தா. இந்தப் படத்துக்குப் பிறகு சூர்யா ஜோடியாக மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார். தமிழில் ‘அலை’, ‘யாவரும் நலம்‘ படங்களை இயக்கிய விக்ரம் கே.குமார் அடுத்து ‘24’ என்ற படத்தை இயக்குகிறார்.

இதில் சூர்யா ஹீரோ. அவரது 2டி என்டர்டெயின்மென்ட் படத்தை தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ஹீரோயினாக நடிக்க பல நடிகைகளிடம் பேசி வந்தனர். இப்போது சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஏப்ரல் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. தற்போது வெங்கட்பிரபு இயக்கும் ‘மாஸ்’ படத்தின் நடித்துவருகிறார் சூர்யா. இதன் சண்டைக்காட்சிகள் நெல்லூரில் படமாக்கப்பட்டு வருகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions