கன்னடப் படமா? சான்ஸே இல்லை - டாட்டா காட்டிய சமந்தா

Bookmark and Share

கன்னடப் படமா? சான்ஸே இல்லை - டாட்டா காட்டிய சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர்கள் கன்னடப் படம் என்றால் தயங்கவே செய்கிறார்கள். த்ரிஷா, நயன்தாராவை தங்களின் படத்தில் நடிக்க வைக்க கன்னட சூப்பர் ஸ்டார்கள் தலைகீழாக நின்றது அனைவரும் அறிந்ததே. இப்போது சமந்தா.

யாஷ்ஷின் புதிய படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அட, சமந்தாவாவது கன்னடப் படத்தில் நடிக்க சம்மதித்தாரே என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்த நேரம், கன்னடப் படத்தில் கமிட்டாகவுமில்லை, கன்னடத்தில் நடிக்கிற ஐடியாவும் இல்லை என்று கடுக்காய் தந்துள்ளார் சமந்தா. 

தமிழ், தெலுங்கு என்றால் பாயும் நடிகைகள், கன்னடம், மலையாளம் என்றால் தாவுவதற்கு சம்பளமே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions