பிக்கு ரீமேக்கில் அப்பா-மகளாக சமந்தா, வெங்கடேஷ்...?

Bookmark and Share

பிக்கு ரீமேக்கில் அப்பா-மகளாக சமந்தா, வெங்கடேஷ்...?

மெகா ஹிட் கொடுத்த மனம் படத்தில் பிரபல நடிகை சமந்தா கிங் நாகர்ஜுனின் அம்மாவாக வித்தியாசமான ரோலில் நடித்து பாராட்டுதல்களை பெற்றார். அவர் தற்போது பிரபல மூத்த நடிகரான விக்டரி வெங்கடேஷுக்கு மகளாக நடிக்க இருக்கிறாராம்.

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் பிரபல நடிகை தீபிகா படுகோனே அப்பா-மகளாக நடித்த பிக்கு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது நினைவிருக்கலாம். அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் வெங்கடேஷும், சமந்தாவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

அதாவது அமிதாப் பச்சன் வேடத்தில் வெங்கடேஷும், தீபிகா படுகோனே வேடத்தில் சமந்தாவும் நடிக்க இருக்கிறார்களாம். பிக்கு மிகச்சிறந்த குடும்ப பாங்கான பொழுதுபோக்கு படமாகும்.

குறிப்பாக குழந்தைகளை மிகவும் கவர்ந்த படமாகும். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் சமந்தா சன் ஆப் சத்யமூர்த்தியிலும், வெங்கடேஷ் உடன் கோபால கோபால என்ற படங்களில் நடித்தது நினைவிருக்கலாம். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions