வட சென்னை படத்தில் சமந்தா நடிப்பாரா?

Bookmark and Share

வட சென்னை படத்தில் சமந்தா நடிப்பாரா?

வெற்றிமாறன், தனுஷ் இருவரும் வட சென்னை படத்தில் இணைய இருப்பதாக நீண்ட நாட்களாக சொல்லப்பட்டு வருகிறது. தனுஷ் வேறு பல படங்களில் தொடர்ந்து கமிட்டாகி வந்ததால் வட சென்னை படம் ட்ராப்பாகிவிட்டதோ என் சந்தேகம் இருந்தது.

இந்நிலையில், வட சென்னை ஷூட்டிங் இம்மாதம் 15-ஆம் தேதி துவங்கவிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. வட சென்னை பின்னணியில் நடைபெறும் கதை இது. இப்படத்திற்காக மிகப்பெரிய ஜெயில் செட் ஒன்றை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருக்கிறார். முக்கிய வேடத்தில் ஆன்ட்ரியா நடிக்க இருக்கிறார். சமந்தாவின் திருமண அறிவிப்பு வெளியாகி இருப்பதால் வட சென்னை படத்தின் கதாநாயகியில் மாற்றம் இருக்கலாம் என தகவல் வந்துள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions