ஜுன் மாதம் விஜய்யுடன் இணையும் சமந்தா

Bookmark and Share

ஜுன் மாதம் விஜய்யுடன் இணையும் சமந்தா

சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படங்களில் நடித்து கொடுத்து முடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

அதன்படி, தற்போது விஷாலுடன் ‘இரும்பு திரை’, விஜய் சேதுபதியுடன் ‘அநீதி கண்கள்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பில் ஜுன் மாதத்தில் சமந்தா கலந்துகொள்வார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு சிவகார்த்திகேயன் நடிக்கும் படமொன்றிலும், சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

விஜய்-அட்லி கூட்டணி தற்போது ஐரோப்பாவில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது. இம்மாத இறுதியில் இந்தியா திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரும்பியதும் விஜய்-சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக இதை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..
விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து
இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- யாருமே எதிர்ப்பார்க்கவில்லை
விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்
நீங்கதாண்ணே வரணும், போகணும் - வடிவேலுவை ஆச்சர்யப்படுத்திய விஜய்
அப்துலை குறும்பாக மிரட்டிய இளைய தளபதி
ஒரு இயக்குனராக சொல்ல கூடாது, ஆனால்..! விஜய்61 பற்றி அட்லீ
சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா?
விஜய்யின் 61வது படத்தில் இணைந்த ரசிகர்களின் பேவரெட் காமெடி நடிகர்
விஜய்யின் 61வது படத்தின் ஃபஸ்ட் லுக்கிற்கு முன் ரசிகர்களுக்கு ஒரு தெறி ஸ்பெஷல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions