சிங்கத்தை சீண்டிப் பார்க்கும் சம்பூர்ணேஷ் பாபு

Bookmark and Share

சிங்கத்தை சீண்டிப் பார்க்கும் சம்பூர்ணேஷ் பாபு

தமிழில் 'ஸ்பூஃப்' வகை திரைப்படமாக வந்த 'தமிழ்ப் படம்' தமிழ்ப் படங்களையே கிண்டலடித்து வெற்றி பெற்று வசூலை அள்ளியது. அதன் பின் அப்படிப்பட்ட படங்கள் எதுவும் தமிழில் வரவில்லை.

இதே போல தெலுங்கில் சம்பூர்ணேஷ் பாபு என்று ஒருவர் நாயகனாக அறிமுகமாகி, தெலுங்குப் படங்களைக் கிண்டலடித்து 'ஹிருதய கலேயம்' என்ற படத்தில் நடித்து அந்தப் படத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்தார்.

வழக்கமாக தெலுங்குப் படங்களை நாம் கிண்டல் செய்து பேசுவோம். அவர் அதையே ஒரு படமாக எடுத்து வெற்றி பெற்று தெலுங்குத் திரையுலகில் நாயகனாகவும் இடம் பிடித்து விட்டார். அதன் பின் சில படங்களில் நடித்தாலும், தற்போது அவர் நடித்து வரும் 'சிங்கம் 123' என்ற தெலுங்குப் படம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. 'மெகா பர்னிங் சூப்பர் ஸ்டார்' சம்பூர்ணேஷ் பாபு நடிக்கும் என்று டீசரின் முதலில் உள்ள டைட்டில் கார்டே சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

தெலுங்குத் திரையுலகின் முக்கியப் புள்ளியான மோகன் பாபு குடும்பத் தயாரிப்பில்தான் இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தின் டீசரைப் பார்க்கும் போது இதுவரை வெளிவந்துள்ள போலீஸ் படங்களைக் கிண்டலடிப்பதாகவே உள்ளது.

குறிப்பாக சூர்யா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற 'சிங்கம், சிங்கம் 2' படங்களின் பாதிப்பில்தான் இந்தப் படம் உருவாகியுள்ளதோ என யோசிக்க வைக்கிறது.

இயக்குனர் ஹரி, சூர்யா விரைவில் இணைந்து 'சிங்கம் 3' படத்தை உருவாக்க உள்ள நிலையில் இந்த தெலுங்குப் படத்தின் பெயரையும் 'சிங்கம் 123' வைத்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

'தன் கையால் தன் கைகளை குத்திக் கொள்வது' என்பது இதுதானோ...திரையுலகத்தினருக்கு திரையுலகத்தினரேதான் எதிரிகளாக இருக்கிறார்கள்.

 


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions