தமிழ் சேனலுக்கு திரும்பினார் சமிக்ஷா

Bookmark and Share

தமிழ் சேனலுக்கு திரும்பினார் சமிக்ஷா

சமிக்ஷாவை நினைவிருக்கிறதா? அறிந்தும் அறியாமலும் படத்தில் நவ்தீப்புக்கு ஜோடியாக நடித்தவர். பஞ்சாபி நடிகை. அதன் பிறகு மனதோடு மழைக்காலம், மெர்க்குரி பூக்கள், முருகா, உள்பட சில படங்களில் நடித்தார்.

ஆனால் தமிழில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தனது சொந்த மொழியான பஞ்சாபி படங்களில் நடித்தார். அங்கும் மார்க்கெட் சரியவே இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அப்படி அவர் நடித்த தொடர் ஒன்று மக்கள் தொலைக்காட்சியில் சாயீரா என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது. இது அக்காள் தங்கையின் கதை. அக்காளுக்கு திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லை.

அதற்கு சாத்தியமில்லை என்று டாக்டர்கள் அறிவிக்க தங்கை சாயீராவை கணவனுக்கு மனம் முடிக்கிறாள் அக்கா. திருமணம் முடிந்ததும், அக்கா-தங்கை இருவருமே கர்ப்பமாகிறார்கள்.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. இதில் சாயீரா கேரக்டரில் சமிக்ஷா நடிக்கிறார். மாலினி கபூர் அக்காவாக நடிக்கிறார். பவன் குமார் ஷா என்பவர் இயக்கி உள்ளார்.

2006ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை சகாரா ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த தொடர் தற்போது மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. சினிமாவில் இருந்து விலகிச் சென்ற சமிக்ஷா டப்பிங் சீரியல் மூலம் தமிழுக்கு மீண்டும் வந்திருக்கிறார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions