லிம்கா ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த மலையாள காஸ்ட்யூம் டிசைனர்..!

Bookmark and Share

லிம்கா ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த மலையாள காஸ்ட்யூம் டிசைனர்..!

மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்ட்டட் காஸ்ட்யூம் டிசைனர் யாரென்றால் அது சமீரா சனீஸ் தான். 31 வயதாகும் இவர் சினிமாவில் நுழைந்து இந்த ஐந்து வருடங்களில் 52 படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி, தற்போது லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார்.

ஆரம்பத்தில் டெலிவிசன் தொடர்களுக்கான ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டிருந்த சமீரா, 'தி ஒயிட் எலிபண்ட்' படம் மூலம் சினிமாவில் நுழைந்தார். பிரபல இயக்குனர் ஆஷிக் அபு மம்முட்டியை வைத்து இயக்கிய 'டாடி கூல்' இரண்டாவது படமாக இவருக்கு கிடைக்க, தொடர்ந்து முன்னணி இயக்குனர்கள், நடிகர்களின் படங்களுக்கு மளமளவென்று அழைப்புகள் வர ஆரம்பித்தன.

1983 காலகட்டத்தை பிரதிபலிக்கும் கிரிக்கெட் படமான '1983' படத்திலும், வரலாற்றுப்படமாக உருவான 'அயூப்பிண்டே புஸ்தகம்' படத்திலும் தனது சிறப்பான ஆடை வடிவமைப்பால் அசத்தியிருந்தார் சமீரா..

சமீபத்தில் துல்கர் நடிப்பில் வெளியான '100 டேய்ஸ் ஆப் லவ்' படத்திற்கும் இவர்தான் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியிருந்தார்.


Post your comment





Related News
சீரியல் இயக்குனரையே மிரட்டினார்கள் அன்வர், சமீரா- உண்மையை உடைத்த பகல்நிலவு பிரபலம்
ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை கூறிய பகல்நிலவு ஜோடி அன்வர், சமீரா- வருத்தத்தில் ரசிகர்கள்
சமீரா ரெட்டிக்கு ஆண் குழந்தை...!
சமீரா ரெட்டி கர்ப்பம்... இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் என அறிவிப்பு
ராஜபக்சே மகனுடன் ஆட்டம் போட்ட சமீரா ரெட்டியை புறக்கணிக்க வேண்டும் - ஆரம்பித்தது அடுத்த சர்ச்சை
ராஜபக்ஷே மகனுடன் சமீரா ரெட்டி நெருக்கம்?: இணையதளத்தில் வெளியான படத்தால் பரபரப்பு
அவசர அவசரமாக இன்று கல்யாணம் செய்து கொள்ளும் சமீரா ரெட்டி ..!
இரண்டு வருட காதலரை கரம் பிடிக்கிறார் நடிகை சமீரா ரெட்டி..!
சமீரா ரெட்டி வயதை கேட்டு வாய் பிளந்த நடிகர்கள்!
ஓப்ரா வின்ப்ரேக்கு புடவை பரிசளித்தார் நடிகை சமீரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions