பேரரசுவின் 'சாம்ராஜ்யம்-2' ஜூன்-5ல் ரிலீஸ்..!

Bookmark and Share

பேரரசுவின் 'சாம்ராஜ்யம்-2' ஜூன்-5ல் ரிலீஸ்..!

மீண்டும் ஒரு சூப்பர்ஹிட் படம் தந்தே தீருவது என்ற வைராக்கியத்துடன் தற்போது 'திகார்' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் பேரரசு. சொல்லப்போனால் பேரரசு இந்தப்படத்தை மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக இயக்கியுள்ளார்.

மலையாளத்தில் இதன் பெயர் 'சாம்ராஜ்யம்-2'.. ஹீரோவாக உன்னி முகுந்தனும் தாதாவாக பார்த்திபனும் நடித்துள்ளனர். அதுமட்டுமல்ல.. இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவைக்கூட டில்லி சிறை காவல்துறை முன்னாள் அதிகாரி, சாதனைப்பெண்மணி கிரண்பேடியை அழைத்துவந்து மிகவும் சிறப்பாக, அதேசமயம் வித்தியாசமான முறையில் நடத்தினார் இயக்குனர் பேரரசு.

ஆனால் அதன்பின் கடந்த ஆறு மாதங்களாக படம் வெளியாகும் அறிகுறி எதையும் காணோம்.. காரணம் முகமது சபீக் என்பவர் இந்தப்படத்தின் கதை தன்னுடையது என பேரரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததுதான்.

ஆனால் அவரால் அதை உண்மை என நிரூபிக்க முடியாமல் போய்விட, இப்போது படத்தின் ரிலீஸ் வேலைகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அதனால் வரும் ஜூன்-5ஆம் தேதி 'சாம்ராஜ்யம்-2' வெளியாவது உறுதி.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions