63-வது தேசிய விருதுகள் அறிவிப்பு; இளையராஜா, சமுத்திரக்கனி, ரித்திகா சிங் ஆகியோருக்கு விருது!

Bookmark and Share

63-வது தேசிய விருதுகள் அறிவிப்பு; இளையராஜா, சமுத்திரக்கனி, ரித்திகா சிங் ஆகியோருக்கு விருது!

63-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் வெற்றிமாறனின் விசாரணை படம் சிறந்த தமிழ் படம், சிறந்த எடிட்டர் (மறைந்த கிஷோர்) மற்றும் சிறந்த குணச்சித்திர நடிகர் (சமுத்திரக்கனி) ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளை கைப்பற்றியுள்ளது.

மேலும் தாரை தப்பட்டை படத்துக்காக இசைஞானி இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருதும் இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக நடிகை ரித்திகா சிங்குக்கு ஸ்பெஷல் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜமௌலியின் ‘பாகுபலி’ படத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. சிறந்த இயக்குனர் விருது பாஜிராவ் மஸ்தானி படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறந்த நடிகராக பீக்கு படத்தில் நடித்ததற்காக அமிதாப்பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக கங்கனா ரனாவத், ‘தனு வெட்ஸ் மனு ரிடன்ஸ்’ படத்தில் நடித்ததற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 


Post your comment





Related News
தனுஷின் வட சென்னையில் இணைந்த சமுத்திரக்கனி!
விரைவில் துவங்குகிறது ‘சாட்டை – 2’!
சமுத்திரக்கனியின் அப்பா படம் குறித்து இன்று இணையத்தில் பேசும் சூர்யா!
சமுத்திரக்கனியின் படத்தை வெளியிடும் தனுஷ்!
விக்ரமுக்காக வருந்தும் தேசிய விருது பெற்ற நடிகர் சமுத்திரக்கனி!
வாட்ஸ் அப்பில் உலா வரும் இயக்குனரின் கண்ணிர் கதை
படத்தின் டைட்டிலை மாற்றிய போலீஸ் அதிகாரிகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions