சாட்டை டைட்டிலில் தொடர் படங்களை தயாரிக்க சமுத்திரகனி முடிவு

Bookmark and Share

சாட்டை டைட்டிலில் தொடர் படங்களை தயாரிக்க சமுத்திரகனி முடிவு

இயக்குனர் சமுத்திரகனி முதன் முதலாக ஹீரோவாக நடித்த சாட்டை படம் வெற்றி பெற்றது. நிறைய விருதுகளும் பெற்றது. அதனை அன்பழகன் இயக்கி இருந்தார். ஒரு ஆசிரியரின் பொறுப்பு மிக்க கடமையை அது சொன்னது.

தற்போது சமுத்திரகனி ஹாலிவுட் படங்களின் பாணியில் சாட்டை என்ற தலைப்பில் தொடர்ந்து நான்கு பாகங்களை தயாரிக்க முடிவு செய்திருக்கிறார். முதல் கட்டமாக சாட்டை படத்தின் இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்டை எழுதி முடித்து விட்டார்.

முதல் பாகம் ஆசிரியர் என்றால் இரண்டாம் பாகம் அப்பாவின் கடமை பற்றி பேசப்போகிறது. சமுத்திரகனி நல்ல அப்பாவாக நடிக்கிறார். கெட்ட அப்பாவாக தம்பி ராமையா நடிக்கிறார். இமான் இசை அமைக்கிறார்.

முதல் பாகத்தை இயக்கிய அன்பழகனே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். சாட்டை 3 மகன் பற்றியும், சாட்டை 4 கணவன் பற்றியும் திரைக்கதை கொண்டதாக இருக்கும்.

வருடத்திற்கு சாட்டை சீரியலில் ஒரு படம் தயாரிக்கவும், நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார் சமுத்திரகனி. தற்போது விஜய் நடிக்கும் புலியில் முக்கிய கேரக்டர், சூர்யா நடிக்கும் மாஸ் படத்தில் 60 வயது வில்லன், ரஜினி முருகனில் கிராமத்து வில்லன், கொளஞ்சி படத்தில் கதையின் நாயகன் என சமுத்திரகனி காட்டில் கோடை மழை கொட்டுகிறது.


Post your comment





Related News
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்
விமர்சகர்களுக்கு சவால் விட்ட சமுத்திரக்கனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions