சஸ்பென்ஸ் வேடத்தில் சமுத்திரகனி!

Bookmark and Share

சஸ்பென்ஸ் வேடத்தில் சமுத்திரகனி!

வில்லனாக நடிக்கத் தொடங்கிய டைரக்டர் சமுத்திரகனி, பின்னர் குணசித்திர நடிகரானார். அதையடுத்து புரட்சிகரமான வேடங்களில் நடித்தார். இப்போது கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்கிறார்.

முக்கியமாக, பல மார்க்கெட் இல்லாத ஹீரோக்களின் படங்களில் அவர்தான் இருக்கிறார். இவரை வைத்துதான் படங்களின் வியாபாரம் என்கிற நிலை இருப்பதால், அந்த ஹீரோக்களுக்கு இணையாக சமுத்திரகனிக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது ராவா என்ற படத்தில் ஒரு சஸ்பென்ஸ் வேடத்தில் நடிக்கிறார் சமுத்திரகனி. இப்படத்தில் புதுமுக ஹீரோ நடிப்பதால் அவரை விட சமுத்திரகனிக்குத்தான் கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதோடு, இந்த இரண்டு ஹீரோக்களுக்கும் சேர்த்து ஒரேயொரு நாயகியாக ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார்.

ஆனால், இவர்களில் அவர் யாருக்கு ஜோடி என்பது படத்தின் க்ளைமாக்சில்தான் தெரியுமாம். அந்த அளவுக்கு அவர் யாருக்கு ஜோடி என்பதை கண்டுபிடிக்க முடியாத வகையில் ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் இந்த ராவா உருவாகிறதாம். குறிப்பாக, இதுவரை நடித்த படங்களில் இருந்து இளமையான கதாபாத்திரத்தில் வருகிறாராம் சமுத்திரகனி.


Post your comment





Related News
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்
விமர்சகர்களுக்கு சவால் விட்ட சமுத்திரக்கனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions