செண்டிமென்ட் ரோலில் சமுத்திரகனி!

Bookmark and Share

செண்டிமென்ட் ரோலில் சமுத்திரகனி!

நிமிர்ந்து நில் படத்தை அடுத்து சமுத்திரகனிக்கு ஏராளமான நடிப்பு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அதனால், டைரக்ஷனில்கூட அவரால் கவனத்தை திருப்ப முடியவில்லை.

மேலும், நடிக்க வேண்டும் என்பது அவருக்குள் இருந்த நீண்டநாள் ஆசை என்பதால், இப்போது நடிப்பில் கூடுதல் கவனத்தை செலுத்திக்கொண்டிருக்கிறார். அதேசமயம், சமூகத்துக்கு தான் நடிக்கும் கேரக்டர்கள் மூலம் ஏதேனும் நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருக்கிறார்.

அவரது இந்த மனநிலையை புரிந்து கொண்டதால் டைரக்டர்களும் சமுத்திரகனிக்கென்று அழுத்தமான பாசிட்டீவான கேரக்டர்களை ஸ்கிரிப்ட் பண்ணும்போதே ரெடி பண்ணி விடுகின்றனர்.

ஆனால், அப்படி அதிகப்படியான படங்கள் அவரைத் தேடி சென்று கொண்டிருப்பதால், பல படங்களில் தனது இயலாமையை தெரிவித்து விடும் சமுத்திரகனி, சில படங்களின் கேரக்டர் தன்னை அதிகமாக பாதித்தால், அந்த படங்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணி கால்சீட் கொடுத்தும் நடிக்கிறார்.

அந்த வகையில், தற்போது பெட்டிக்கடை என்ற படத்தில் அவரை நடிக்க அழைத்தபோது அவர்கள் கேட்ட தேதியில் சமுத்திரகனியிடம் கால்சீட் இல்லையாம். ஆனால் அந்த படத்தில் அவரை நடிக்க அழைத்த கேரக்டர் அவருக்கு அதிகம் பிடித்து விட்டதாம்.

கதைப்படி, படத்தில் கடைசி அரை மணி நேரம் மட்டுமே வந்து செல்லும் அந்த செண்டிமென்ட் கதாபாத்திரம் படம் பார்ப்பவர்களின் மனதில் அப்படியே ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு உணர்வுப்பூர்வமான வேடமாம். அதனால் வேறொரு படத்துக்கு கொடுத்திருந்த கால்சீட்டை இந்த படத்துக்கு கொடுத்து நடிக்கிறாராம் சமுத்திரகனி.

 


Post your comment





Related News
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்
விமர்சகர்களுக்கு சவால் விட்ட சமுத்திரக்கனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions