சமுத்திரகனியும் காமெடியன் ஆனார்

Bookmark and Share

சமுத்திரகனியும் காமெடியன் ஆனார்

ஆக்ஷன் ஹீரோக்கள் கூட பேயாகவும், காமெடியனாகவும் நடிக்கும் காலம் இது. காரணம் மக்களுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்துவிட்டு போக நினைக்கிறார்கள். ஆனதல் இதில் சமுத்திரகனி விதிவிலக்கு. விரைப்பும், முறைப்புமாக தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர் அவர்.

முதல்படமான சுப்பிரமணியுரத்தில் சைலண்ட் வில்லனாக நடித்தாலும் அவர் நடித்த சாட்டை படம் அவருக்கு வேறொரு வண்ணத்தை கொடுத்தது. தமிழ் சினிமா ரசிகனின் ஆதர்சன நடிகராக வளர்ந்தார். கருப்பு வெள்ளை காலத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா போன்றவர்கள் எந்த ஹீரோவுடன், எந்த கேரக்டரில் நடித்தாலும் தனித்து பேசப்பட்டார்கள். அதைப்போல சமுத்திரகனி பார்க்கப்பட்டார்.

மாஸ் படத்தில் அவர் வில்லனாக நடித்தது, அதுவும் அந்தக் காலத்து சபாரி வில்லனாக நடித்தது அவரது ஆர்தசன நடிகர் இமேஜை சற்று குறைத்தது. தற்போது அவர் அதிபர் என்ற படத்தில் முதன் முறையாக காமெடியனாக நடிக்கிறார். தம்பி ராமய்யா, சிங்கம்புலி போன்ற காமெடியன்களோடு ஒரு வங்கியை கொள்ளையடிக்க திட்டமிடும் காமெடி கொள்ளையன் கேரக்டரில் நடித்திருக்கிறார். இதில் ஜீவன் ஹீரோவாகவும், வித்யா என்ற புதுமுகம் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். சூர்ய பிரகாஷ் இயக்கி உள்ளார்.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions