வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சமுத்திரகனி

Bookmark and Share

வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சமுத்திரகனி

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விசாரணை’ படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கியமான வேடத்தில் நடித்தவர் சமுத்திரகனி. இப்படத்திற்காக சமுத்திரகனிக்கு தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில், வெற்றிமாறன் அடுத்ததாக தனுஷை வைத்து இயக்கவிருக்கும் ‘வடசென்னை’ படத்திலும் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களை தொடர்ந்து வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி இணையும் ‘வடசென்னை’ படத்தில் ஏற்கெனவே வில்லன் வேடத்தில் நடிக்க டேனியல் பாலாஜி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இருப்பினும், சமுத்திரகனிக்கு இப்படத்தில் மிகவும் முக்கியமான வேடமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இப்படத்தின் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட ஜெயில் போன்ற அரங்கு ஒன்றை அமைத்து வருகின்றனர். தனுஷ் தற்போது ‘தொடரி’, ‘கொடி’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

கவுதம்மேனன் இயக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும் நடித்து வருகிறார். விரைவில், ‘வடசென்னை’ படக்குழுவுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 



Post your comment





Related News
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்
விமர்சகர்களுக்கு சவால் விட்ட சமுத்திரக்கனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions