படங்கள்... பாடங்களாகுமா....? - சமுத்திரகனியிடம் ஒரு கேள்வி.?!

Bookmark and Share

படங்கள்... பாடங்களாகுமா....? - சமுத்திரகனியிடம் ஒரு கேள்வி.?!

தமிழ் சினிமாவில் சமீபத்தில் கணக்கெடுத்து பார்த்தால் வாராவாரம் எட்டு முதல் பத்து படங்கள் வரை வெளிவந்து கொண்டிருக்கிறது. நிறைய புதுமுகங்கள், அறிமுகங்கள்.

புதுமுக இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், டெக்னீஷியன்கள்... என கோடம்பாக்கம் தமிழ் சினிமா நிரம்பி வழிகிறது.  ஆனால், சமீபத்தில் வெளிவந்த படங்களின் ஒரு சர்வேயை பார்த்தால்... கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், குறுக்கு வழியில் சம்பாதிப்பது, வன்முறை சம்பவங்கள், தவறை சித்திரிக்கும் காட்சிகள்... குழந்தைகளுக்கு எதிரே கத்தியால் குத்துதல் என்று... மொத்தத்தில் குற்றம் செய்வதற்கான வழிமுறைகள் அனைத்தையும் தூண்டும் விதமாக, வெளிப்படுத்தும் விதமாக திரையில் பார்க்கும் போது ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது தமிழ் சினிமா எங்கே போய் கொண்டிருக்கிறது.? என்று எண்ண தோன்றுகிறது. திறமையான இயக்குநர்கள், புதிய கதைக்களத்தோடு ஒரு பக்கமும், வன்முறைகளும், சமூக முறைகேடுகளும் இன்னொரு பக்கமும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தால் சமூகத்திற்கும், அடுத்த தலைமுறையினருக்கும் பாடம் சொல்லக்கூடிய சினிமா படங்கள், ரசிகனை சிந்திக்க வைக்க வேண்டுமே தவிர, குற்றங்களை தூண்டும் வகையில் அக்குவேர் ஆணிவேராக படம் பிடித்து காட்டக்கூடாது.

இதுகுறித்து நிமிர்ந்து நில் போன்ற சமூக சிந்தனையுள்ள படங்களை கொடுத்த இயக்குநர் சமுத்திர கனியிடம் கேட்டபோது, படைப்பாளி உள் உணர்வுதான் படமாக வெளிவருகிறது.

சில இளம் படைப்பாளிகள் ஆங்கில படங்களை பார்த்து ஒரு சில காட்சிகளை வைத்து படமாக எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், இது என்னுடைய உள் உணர்வில் வந்த படம் என்று யாரும் சொன்னால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்போதெல்லாம் குறைந்த பட்ஜெட்டில் எப்படியாவது ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். முதலில் நாம் சரியாக இருக்க வேண்டும், அப்போது தான் நாம் சொல்லக்கூடிய விஷயங்களும் சரியாக இருக்கும்.

பலருக்கு தன்மேலேயே நம்பிக்கை இல்லை, எப்படி ஒரு படைப்பின் மீது நம்பிக்கை வரும். இப்போதெல்லாம் சமூகத்தின் மீது பொறுப்பும், அக்கறையும் உள்ள படங்கள் வெளிவருவது மிக குறைவு, எனக்கும் நல்ல படங்கள் வெளிவர வேண்டும் என்பதில் பெரும் அக்கறை இருக்கிறது என்று சமூகத்தின் மீது தான் கொண்ட அக்கறையில் இப்படி கூறினார்.

இன்றைய நிலையி்ல்  பல திறமையான படைப்பாளிகள் உள்ளனர். அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி, சமூக சிந்தனை கருத்துகள் கொண்ட பல படைப்புகளை இன்னும் சிறப்பாக உருவாக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்று சமுத்திரகனி கூறினார்.


Post your comment





Related News
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்
விமர்சகர்களுக்கு சவால் விட்ட சமுத்திரக்கனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions