அதிரடி நடிகரான சமுத்திரகனி!

Bookmark and Share

அதிரடி நடிகரான சமுத்திரகனி!

புரட்சிகரமான, அதிரடியான வேடங்கள் என்றாலே அதற்கு சமுத்திரகனிதான் பொருத்தமாக இருப்பார் என்றாகி விட்டது. அதற்கு காரணம், அவரும் சமூகத்தின் மீது ஓரளவு அக்கறை கொண்டவர்.

அதன் வெளிப்பாடுதான் ஜெயம்ரவியை வைத்து அவர் இயக்கிய நிமிர்ந்து நில் படம். மேலும், சாட்டை படத்திற்கு பிறகு அவரது நடிப்பு மார்க்கெட் படு சூடாகி விட்டது.

அதனால்தான் கிட்னா என்றொரு படத்தை இயக்கி நடிக்க களமிறங்கிய அவர், இப்போது அந்த படத்தை இயக்கும் வேலைகளை விட்டு விட்டு பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

கைவசம் பல படங்களை வைத்திருக்கும் அவர் அத்தனை படங்களிலுமே ஹீரோக்களுக்கு இணையான அல்லது கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாகவே நடிக்கிறார்.

இதில், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட சில படங்களில் சாப்ட்டான வேடங்களில் நடித்தபோதும், தற்போது மாஸ், ரஜினி முருகன், காவல், ஆதார், விசாரணை உள்ளிட்ட பல படங்களில் அதிரடியான வேடங்களில் நடிக்கிறார் சமுத்திரகனி.

அந்தவகையில், காவல் படத்தில் அதிரடி போலீசாக நடிக்கும் அவர், அந்த படத்தில் நடிக்கும்போது தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு தளங்களிலேயே ஜிம் அமைத்து நடிப்பது போக மீதமுள்ள நேரங்களில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து உடம்பை வலுவாக்கிக்கொண்டேயிருந்தாராம்.

சமுத்திரகனியின் இந்த ஈடுபாடு அவரை வைத்து படம் பண்ணும் டைரக்டர்களுக்கு அவர் மீதும் அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தி வருகிறது.

 


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions