சமுத்திரகனி மீண்டும் ஆசிரியர் வேடத்தில்

Bookmark and Share

சமுத்திரகனி மீண்டும் ஆசிரியர் வேடத்தில்

சமுத்திரகனி சாட்டை படத்தில் பள்ளி ஆசிரியராக நடித்தார். அந்த வேடம் அவரை பெரிய அளவில் பேச வைத்தது. அந்த கதையில் லீடு ரோலில் நடித்த சமுத்திரகனி அதன்பிறகு வேலையில்லா பட்டதாரி, காடு, சண்டமாருதம், மாஸ், காவல் என பல படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்தார்.

தொடர்ந்து ரஜினிமுருகன், அதிபர், பாயும்புலி, விசாரணை, பெட்டிக்கடை இன்று விடுமுறை என பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் . இதில் பெட்டிக்கடை இன்று விடுமுறை படத்தில் மீண்டும் அவர் ஆசிரியர் வேடத்தில் நடித்துள்ளார்.

பள்ளிப் பாடம் நடத்தும் ஆசிரியராக இல்லாமல் சிலம்பம், கில்லி என பல பண்பாட்டுக்கலைகளை சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராக நடித்து வருகிறார்.

இப் படத்திற்காக சிலம்பம், கில்லி உள்ளிட்ட பல விளையாட்டுக் கலைகளை அவர் பல மாதங்களாக முறையாக பயிற்சி பெற்றுவருகிறாராம்.  மேலும், நம்முடைய பாரம்பரிய  கலைகளின் சிறப்பினை இன்றைய இளவட்டங்கள் தெரிந்து கொள்ளும் வகையில்  தனது கேரக்டர் மூலம் சொல்கிறாராம்.    


Post your comment





Related News
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்
விமர்சகர்களுக்கு சவால் விட்ட சமுத்திரக்கனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions