சினிமாவாகிறது ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் வாழ்க்கை

Bookmark and Share

சினிமாவாகிறது ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் வாழ்க்கை

தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் அதிகம் புகழ் பெற்றவர் சகாயம். மதுரையில் கிரானைட் முறைகளை கண்டுபிடித்தது. நஷ்டத்தில் இயங்கிய கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தை லாபகரமாக்கியது.

உள்பட பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். தற்போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரானைட் முறைகேடுகளை பற்றி ஆராய்ந்து விசாரித்து வருகிறார். அவரது அறிக்கையை நாடே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

பயங்கர தாதாக்களின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், பல நூறு கோடிகள் இவற்றுக்கு அசைந்து கொடுக்காமல் பணியாற்றி வருகிறார் சகாயம். துணிச்சலான அவர் நடவடிக்கைகளால் தமிழ் நாட்டு இளைஞர்கள் மத்தியில் நிஜ ஹீரோவாக பார்க்கப்படுகிறார்.

தற்போது அவரது கதையை இயக்குனர் சமுத்திரகனி சினிமாவாக எடுக்க திட்டமிட்டிருக்கிறார். சகாயம் தன் சுயசரிதையை புத்தகமாக எழுதி உள்ளார். அந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து சமுத்திரகனி திரைக்கதை எழுதி வருகிறார்.

இதற்கான அனுமதியையும் அவர் சகாயத்திடம் பெற்று விட்டதாக தெரிகிறது. சாட்டை படத்தை தயாரித்த சாலோம் ஸ்டூடியோ தயாரிக்கலாம் என்று தெரிகிறது. இதுபற்றி அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்
விமர்சகர்களுக்கு சவால் விட்ட சமுத்திரக்கனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions