கண்பார்வை இல்லாத வேடத்தில் சமுத்திரகனி!

Bookmark and Share

கண்பார்வை இல்லாத வேடத்தில் சமுத்திரகனி!

சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக தனது நடிப்பு கேரியரை தொடங்கியவர் இயக்குனர் சமுத்திரகனி. அதையடுத்து ஈசனில் போலீஸ் வேடத்தில் நடித்த அவர், பின்னர், புரட்சிகரமான மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.

குறிப்பாக, சாட்டை படத்தில் நடித்த ஆசிரியர் வேடம் அவரை நிலையான முழுமையான நடிகராக்கியது. அந்த வகையில், தற்போது பத்து படங்களுக்கு மேல் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் சமுத்திரகனி.

அதோடு, அவர் கேரக்டர் நடிகர்தான் என்றபோதும், படப்பிடிப்பு தளங்களில் ஹீரோ - ஹீரோயினிக்கு கொடுக்கப்படும் அனைத்து வசதி வாய்ப்புகளும் இவருக்கும் செய்து கொடுக்கிறார்கள்.

அதாவது, மற்றவர்களின் கேரவன்களில் சமுத்திரகனியை தங்க வைக்காமல் தனி கேரவன் வசதியே செய்து கொடுக்கிறார்கள். இந்த நிலையில், தற்போது ராவா என்ற படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார் சமுத்திரகனி.

குறிப்பாக, கண் பார்வை இல்லாதவராக அவர் நடிக்கிறார். இதுவரை சமுத்திரகனி நடித்த வேடங்களில் இது முற்றிலும் மாறுபட்ட வேடம் என்பதால், இந்த படத்திற்கு பிறகு சமுத்திரகனிக்கு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடம் காத்திருக்கிறது என்கிறார்கள்.

ஏற்கனவே நான் கடவுள் படத்தில் பூஜா, காசி, தாண்டவம் படங்களில் விக்ரம் என பல நடிகர்கள் கண் பார்வை இல்லாத படங்களில் நடித்திருந்தபோதும்,. சமுத்திரகனி ராவா படத்துக்காக நடித்து வரும் இந்த வேடம் அதிக உருக்கமான கேரக்டராம். அதனால் இந்த ராவா சமுத்திரகனிக்கு ஒரு மைல்கல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்
விமர்சகர்களுக்கு சவால் விட்ட சமுத்திரக்கனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions