ஜோடியை விரும்பாத சமுத்திரகனி!

Bookmark and Share

ஜோடியை விரும்பாத சமுத்திரகனி!

சுப்பிரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்து பேசப்பட்ட டைரக்டர் சமுத்திரகனி அதன்பிறகு ஈசன், சாட்டை, வேலையில்லா பட்டதாரி, காடு என பல படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்தார்.

அடுத்தபடியாக அவரது நடிப்பில் நீயெல்லாம் நல்லா வருவடா, சண்டமாருதம், மாஸ், ஆதார், ரஜினிமுருகன் என பல படங்கள் வெளியாக தயாராகிக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், அடுத்தபடியாக கிட்னா படத்தை இயக்கி நடித்து வருபவர், ராவா என்றொரு படத்திலும் நடிக்கிறார். இப்படத்தில் முழுக்க முழுக்க சமுத்திரகனியின் கதாபாத்திரத்தை முன்வைத்துதான் கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

அதனால் அவரது கேரக்டருக்கு ஒரு ஜோடி நடிகையை வைக்கலாமா என்று யோசித்து வந்தார்களாம். ஆனால், விசயம் சமுத்திரகனியின் காதுக்கு வந்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாராம்.

காரணம், எடுத்துக்கொள்ளும் கதைக்கு என்ன தேவையோ அதைத்தான் செய்ய வேண்டும். மாறாக, எனக்கொரு ஜோடி நடிகையை வைத்து ஒரு டூயட்டை கதைக்குள் திணித்தால் அந்த கதை கெட்டுப்போய் விடும். மேலும் எனக்கும் அந்த மாதிரி நடிப்பதில் விருப்பமில்லை. எப்போதுமே நான் நடிகன்தான்.

நாயகன் இல்லை. அதனால் எனக்கு பிடிக்கும் பாதையில் பயணிக்கவே விரும்புகிறேன் என்று சொல்லி ஜோடி நடிகையை இணைக்கும் முயற்சிக்கு தடை போட்டு விட்டாராம் சமுததிரகனி.


Post your comment





Related News
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்
விமர்சகர்களுக்கு சவால் விட்ட சமுத்திரக்கனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions