விசாரணை படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்தது மகிழ்ச்சி: சமுத்திரகனி பேட்டி

Bookmark and Share

விசாரணை படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்தது மகிழ்ச்சி: சமுத்திரகனி பேட்டி

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தயாரித்த ‘விசாரணை’ படத்துக்கு சிறந்த தமிழ் மொழி படத்துக்கான தேசிய விருது கிடைத்து உள்ளது.

இதில் நடித்த சமுத்திரகனிக்கு சிறந்த துணை நடிகர் விருதும், ‘எடிட்டர்’ ஆக பணியாற்றிய மறைந்த கிஷோருக்கு சிறந்த எடிட்டருக்கான விருதும் கிடைத்து உள்ளது.

நடிகர் சமுத்திரகனி கூறியதாவது:-

‘‘64-வது தேசிய விருது பட்டியலில் எனக்கு சிறந்த துணை நடிகர் விருது, நடிகர் தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ படத்துக்காக கிடைத்து உள்ளது.

எனக்கு இந்த விருது கிடைக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும், ‘விசாரணை’ படக்குழுவினருக்கும், தேசிய விருது தேர்வுக்குழுவுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

‘விசாரணை’ படத்துக்கு சிறந்த தமிழ் படம் விருதும், மறைந்த ‘எடிட்டர்’ கிஷோருக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதும் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ‘விசாரணை’ படக்குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டு. எனது அடுத்த படைப்பான ‘அப்பா’ படம் விரைவில் வெளிவர உள்ளது.’’

இவ்வாறு சமுத்திரகனி கூறினார்.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions