சமுத்திரகனிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா!

Bookmark and Share

சமுத்திரகனிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா!

சுப்பிரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்த இயக்குனர் சமுத்திரகனி, அதையடுத்து ஈசன் படத்தில் போலீசாக நடித்தார். ஆக வில்லன் இமேஜ் தன் மீது பதிந்து விடாத வகையில் அதன்பிறகு மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கியவர், சாட்டை படத்திற்கு பிறகு முக்கியமான நடிகராகி விட்டார்.

அதாவது சமுத்திரகனி என்றாலே அழுத்தமான கதாபாத்திரங்களுக்குத்தான் பொருத்தமாக இருப்பார் என்கிற இமேஜ் அவர் மீது விழுந்தது. அதோடு வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுசுக்கு அப்பாவாகவும் நடித்தார்.

இப்படி பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வரும் அவர் இப்போது பல படங்களில் முக்கியமான ரோல்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில், ராவா என்றொரு படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார் சமுத்திரகனி.

இதே படத்தில் இன்னொரு ஹீரோவாக கோபி என்கிற புதியவர் நடிக்க, சமுத்திரகனி ஒரு வெயிட்டான ஹீரோவாக நடிக்கிறாராம். மேலும், அவருக்கு ஜோடியாக தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா தத்தா நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆக, இதுவரை ஷோலோவாக நடித்து வந்த சமுத்திரகனி இப்போது டூயட்டும் பாடத் தொடங்கியிருக்கிறார். 

 


Post your comment





Related News
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
மகள் வயது பெண்ணை இப்படியா அசிங்கமாக பேசுவது? - பொன்னம்பலம் வார்த்தையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை
பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம்! காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ
விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்!
பிக்பாஸ்-2 வீட்டிற்குள் செல்வதற்கு முன் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம், இதோ
இன்சூரன்சு ஏஜெண்டாக பணிபுரியும் ஐஸ்வர்யா தத்தா!
அருள்நிதியுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா!
பெங்காலி மொழியில் நடிக்க முயற்சிக்கும் ஐஸ்வர்யா தத்தா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions