காமராசர் இல்லத்தில் சமுத்திரகனி

Bookmark and Share

காமராசர் இல்லத்தில் சமுத்திரகனி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரும், முன்னாள் முதல்வருமான காமராசர் வாழ்க்கை வரலாற்றை காமராஜ் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார் ஏ.பாலகிருஷ்ணன். ரிச்சர்ட் மதுரம் என்பவர் காமராஜராக நடித்தார். 2004ம் ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது. அதன் பிறகு படத்தை டிஜிட்டல் படுத்தி வெளியிட்டார் பாலகிருஷ்ணன்.

தற்போது ஏற்கெனவே எடுக்கப்பட்டு நீக்கப்பட்டிருந்த 30 நிமிட காட்சிகளை மீண்டும் சேர்த்தும், சமுத்திரகனி நடிப்பில் மேலும் 30 நிமிட காட்சிகள் புதிதாக எடுக்கப்பட்டு சேர்த்தும் புதிய வடிவில் காமராஜர் படம் வருகிற 10ந் தேதி காமராசர் பிறந்த நாளில் வெளிவருகிறது. தற்போது இந்திரா காந்தி காலத்தில் கொண்டு வரப்பட்ட அவசரநிலை பிரகடனம் பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. மிசாவை எதிர்த்தவர் காமராசர். அதுபற்றி காட்சிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

பட வெளியீட்டையொட்டி காமராசர் படக்குழுவினர் சென்னை திருமலைப்பிள்ளை ரோட்டில் உள்ள காமராசர் வசித்த வீட்டுக்குச் சென்றனர். சமுத்திரகனியும் உடன் சென்றார். அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் காமராஜர் வீட்டை சுற்றிப் பார்த்தார் அங்குள்ள மூத்த காங்கிரஸ் பிரமுகர்களுடன் காமராசர் பற்றி விரிவாக கேட்டுத் தெரிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions