சிவகார்த்திகேயனுடன் மோதுகிறார் சமுத்திரகனி!

Bookmark and Share

சிவகார்த்திகேயனுடன் மோதுகிறார் சமுத்திரகனி!

வேலையில்லா பட்டதாரி, காடு, சண்டமாருதம் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த சமுத்திரகனி, தற்போது ஆதார், மாஸ், விசாரணை, கொளஞ்சி, ரஜினி முருகன், ராவா, பெட்டிக்கடை, அதிபர் உள்பட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சொல்லப்போனால் அவரது கால்சீட்டுக்காக முன்னணி ஹீரோக்களே காத்திருந்து நடித்து வருகிறார்கள். இதில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் ரஜினி முருகன் படத்தில் வில்லனாக நடிக்கிறார் சமுத்திரகனி.

ஏற்கனவே சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் படத்தில் முதன்முறையாக வில்லனாக நடித்த சமுத்திரகனி, அதன்பிறகு இந்த படத்தில்தான் நடிக்கிறார்.

ஆனால் மற்ற வில்லன்களை போன்று அடிதடி சண்டை காட்சிகளில் இறங்காமல் முழுக்க முழுக்க பர்பார்மென்ஸ் வில்லனாகவே நடிக்கிறார் சமுத்திரகனி. குறிப்பாக, அவரது முகபாவனையில், அதாவது அவரது பார்வையிலேயே அதிரடியான வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறாராம். ஆக, இதுவரை குணசித்ர நடிகராகவே நடித்து வந்த சமுத்திரகனி, இந்த படத்தில் வில்லனாகவும் மிரட்டியிருப்பதாக சொல்கிறார்கள்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions