சமுத்திரகனி நடித்து வந்த ராவா படம் ட்ராப்?

Bookmark and Share

சமுத்திரகனி நடித்து வந்த ராவா படம் ட்ராப்?

சமுத்திரகனி கண் பார்வை இல்லாத வேடத்தில் நடித்து வந்த படம் ராவா. இந்த படத்தில் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் நடித்த ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்து வந்தார். அவர்களுடன், தம்பி ராமைய்யா, சிங்கம்புலி என பல முன்னணி நடிகர்கள் நடித்து வந்தனர். அப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை 12 நாட்கள் நடைபெற்றுள்ளது.

தற்போது சமுத்திரகனி அதிக படங்களில் நடித்து வருவதால், அவரது கால்சீட் எப்போது கிடைக்கிறதோ அதுவரை காத்திருந்து இந்த 12 நாட்கள் படப்பிடிப்பைகூட இரண்டுகட்டமாக படமாக்கினார்கள். ஆனால், அப்படி படமாக்கிய காட்சிகளை போட்டுப்பார்த்தபோது தயாரிப்பாளருக்கு திருப்தி ஏற்படவில்லையாம்.
அதனால், தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினால் தனக்கு பெரிய அளவில் பண நஷ்டம்தான் ஏற்படும் என்று இப்போது ராவா படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டாராம்.

அதேசமயம், ராவா படத்தில் ஒர்க் பண்ணிய டெக்னீசியன்களை மாற்றி விட்டு, அப்படத்துக்கு ஒப்பந்தமாகியிருந்த அதே நடிகர் நடிகைகளை வைத்து இன்னொரு படத்தை தொடங்கும் வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறதாம். அந்த படத்திலும் சமுத்திரகனிதான் லீடு ரோலில் நடிக்கிறாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions