சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா?

Bookmark and Share

சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா?

சாமி 2 படத்துக்காக திருநெல்வேலியின் முக்கிய பகுதிகள் காரைக்குடியில் செட் போட்டு படம் பிடிக்கப்படுகிறது.

சாமி படத்தின் தொடர்ச்சியாக சாமி-2 படம் உருவாகி வருகிறது. சாமி படத்தின் தொடக்க பாடலான திருநெல்வேலி அல்வாடா பாடல் பிரபலமான ஒன்று. இந்த பாடல் திருநெல்வேலியின் முக்கிய பகுதிகளில் நடப்பதாக இருக்கும். ஆனால் திருநெல்வேலியில் எடுக்கப்படவில்லை. உண்மையில் காரைக்குடியில் செட் போட்டுதான் படம் பிடித்தார்கள். 

இப்போது இரண்டாம் பாகத்துக்கும் அதே காரைக்குடியில் அதே திருநெல்வேலி பகுதிகளை செட் போட்டு எடுத்து இருக்கிறார்கள். ’டர்ர்ர்ரனக்கா...டர்ர்ர்ரனக்கா...’ என்று தொடங்கும் பாடல் முந்தைய பாக பாடலை விட பெரிய ஹிட் அடிக்கும் என்கிறது படக்குழு. 

சாமி-2 படத்தில் முந்தைய பாகத்தில் நடித்த திரிஷா தவிர அனைவருமே நடிக்கிறார்கள். கீர்த்தி சுரேஷும், சூரியும் புது வரவுகள். த்ரிஷா நடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார் இயக்குநர் ஹரி. ஆனால் திரிஷா இன்னும் அதனை உறுதிப்படுத்தவில்லை.


Post your comment





Related News
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: 2.0 வேற லெவல்
பிரமாண்டத்தால் பிரமிக்க வைத்துவிட்டனர்: 2.0 படத்துக்கு பிரபலங்கள் பாராட்டு
10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகியும், இங்கு ரிலீசாகவில்லை - தவறவிட்ட 2.0 படக்குழு
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions