டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்

Bookmark and Share

டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்

ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள அந்த மோஷன் வீடியோவின் முடிவில், படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. 

அதன்படி படத்தின் டிரைலர் வருகிற மே 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது டிரைலர் வெளியிட்டை மாற்றி இருப்பதாக தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் அறிவித்துள்ளார். 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்திருப்பதால், இது கொண்டாடுவதற்கான நேரம் இல்லை என்றும் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதால், டிரைலர் வெளியீட்டி தள்ளி வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். விரைவில் சாமி ஸ்கொயர் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
தமிழை புறக்கணிக்கிறோம் - சீனுராமசாமி வேதனை
டிராபிக் ராமசாமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சாமி-2 படத்தில் காலா கனெக்‌ஷன்
சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா?
அந்த படத்தை பார்க்க மாட்டேன், நடிக்கவும் மாட்டேன் - அரவிந்த் சாமி
பிக் பாஸ் சீசன்-2 தொகுத்து வழங்க போவது யார்? - வெளிவந்த சூப்பர் தகவல்.!
சாமி-2 படத்தால் த்ரிஷாவுக்கு வந்த சிக்கல் - தயாரிப்பாளர் அதிரடி ட்வீட்.!
விஷால் படம் ஹிந்தி டப்பிங் மட்டுமே இத்தனை கோடி வியாபாரமா?
த்ரிஷா மனசு வைத்தால் மட்டுமே இனி சாமி-2 - அதிர்ச்சியில் படக்குழுவினர்.!
சாமி-2 படத்தின் கதை பற்றி புகைப்படத்துடன் கசிந்த தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions