நெல்லை பெண்ணாக நடித்தது பெருமை: சஞ்சிதாஷெட்டி

Bookmark and Share

நெல்லை பெண்ணாக நடித்தது பெருமை: சஞ்சிதாஷெட்டி

ராமு செல்லப்பா இயக்கத்தில் நட்டி என்கிற நடராஜன், ராஜாஜி சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் உள்பட பலர் நடித்துள்ள படம் `எங்கிட்ட மோதாதே'. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.  இயக்குநர் பாண்டிராஜ், பேசும் போது....சமீபத்தில் என்னோட உதவியாளர் புரூஸ் லீ என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டுக்கு தலைமை தாங்க வந்திருந்தேன்.  இப்போது என்னுடைய உதவி இயக்குநர் ராமு செல்லப்பாவின் `என்கிட்ட மோதாதே' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டுக்கு வந்திருக்கிறேன்.

இந்த கதை சுப்பிரமணியபுரம் போல இருக்கும். இந்த படத்தின் டிரைலர் முதல் அனைத்தும் நம்மை ஈர்க்கும் வகையில் உள்ளது'' என்றார்.நட்டி, "இந்த படத்தின் இயக்குநர் ராமு செல்லப்பா  கதை கூறியதும் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த குழுவுடன் சேர்ந்து இப்படத்தில் நடித்தது மிகச்சிறந்த அனுபவம்'' என்றார்.

சஞ்சிதா ஷெட்டி " நான் எப்போதும் மார்டன் ரோலுக்கு தான் பொருந்துவேன் என்ற எண்ணம் அனைவரிடமும் இருந்தது. ஆனால் அதை இப்போது இப்படத்தின் மூலம் இயக்குனர் ராமு செல்லப்பா மாற்றி விட்டார். இந்த படத்தில் நெல்லை பெண்ணாக நடித்தது எனக்கு பெருமையாக உள்ளது.

நட்டி உடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம்'' என்றார்.விழாவில் கவிஞர் யுகபாரதி, தயாரிப்பாளர் ஈரோஸ் கங்கர், பார்வதி நாயர், இசை அமைப்பாளர் நடராஜன் சங்கரன், ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்த்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?
அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions