சண்டக்கோழி 2-வில் இணைந்த சூரி

Bookmark and Share

சண்டக்கோழி 2-வில் இணைந்த சூரி

கடந்த 2005-ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த படம் ‘சண்டக்கோழி’. மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, மலையாள நடிகர் லால் ஆகியோரின் சிறப்பான நடிப்பில் வெளிவந்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. விஷாலுக்கு ஆக்ஷன் ஹீரோ என்ற அந்தஸ்தையும் பெற்றுக் கொடுத்தது.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கடந்த சில மாதங்களாக லிங்குசாமி திட்டமிட்டு வந்தார். தற்போது, அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதன் இரண்டாம் பாகத்திலும் விஷாலே கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இருப்பினும், இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த மீரா ஜாஸ்மின் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அதேபோல், காமெடிக்கு சதீஷ் ஏற்கெனவே தேர்வாகியிருந்தாலும், தற்போது புதிதாக சூரியும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார். கிராமம், நகரம் சார்ந்து இந்த படம் உருவாவதால் கிராமத்து காமெடி வேடத்துக்கு சூரி பொருத்தமாக இருப்பார் என்பதற்காக அவரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், முந்தைய பாகத்தில் நடித்த ராஜ்கிரணும் இதில் நடிக்கவிருக்கிறார். டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். ‘சண்டக்கோழி’ முதல் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
விஷால் படம் ஹிந்தி டப்பிங் மட்டுமே இத்தனை கோடி வியாபாரமா?
படப்பிடிப்பு தளத்தில் விஷால் இப்படி செய்தரா - நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!
விஷாலின் சண்டக்கோழி ட்ராப்பா? ஒளிப்பதிவாளர் வெளியிட்ட தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions