சரத்குமாரின் சண்டமாருதம் நாளை 500 தியேட்டர்களில் ரிலீஸ்

Bookmark and Share

சரத்குமாரின் சண்டமாருதம் நாளை 500 தியேட்டர்களில் ரிலீஸ்

சரத்குமார் இரு வேடங்களில் நடித்த படம் ‘சண்டமாருதம்’. நாயகிகளாக ஓவியா, மீராநந்தன் நடித்துள்ளனர். ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இந்த படம் இந்தியா முழுவதும் 500 தியேட்டர்களில் நாளை ரிலீஸ் ஆகிறது.

இதுகுறித்து சரத்குமார் அளித்த பேட்டி வருமாறு:–

சாண்டமாருதம் பிரம்மாண்ட படமாக தயாராகி உள்ளது. இதில் சூர்யா என்ற பெயரில் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாகவும், சர்வேஸ்வரன் என்ற பெயரில் பயங்கர தாதாவாகவும் இரு வேடங்களில் நடித்துள்ளேன்.

தாதா வேடம் வித்தியாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றச் செயலில் சம்பந்தப்பட்டதுபோல் அந்த கேரக்டர் இருக்கும். முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக வந்துள்ளது. சண்டமாருதம் படத்தை உலக அளவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளோம். தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வருகிறது.

தமிழகம் முழுவதும் 250–க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில் இருக்கும் ‘மல்டிபிளக்ஸ்’ திரையரங்குகளிலும் அப்படம் வருகிறது.

ஜப்பானிய மொழி டைட்டிலுடன் ஜப்பான் நாட்டில் வெளியிடுகிறோம். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இது இருக்கும். தமிழகம் தவிர பிற மாநிலங்களிலும் அதிக எண்ணிக்கை தியேட்டர்களில் முதல் முறையாக எனது படம் வெளியாகிறது.

இவ்வாறு சரத்குமார் கூறினார். 


Post your comment





Related News
கருணாநிதியை நான் எதுக்கு சந்திக்கணும்? - ஓவியா ஓபன் டாக்.!
சிம்பு - ஓவியா இணையும் படத்தின் கதை இதுதான்
ஓவியாவின் உண்மை முகம் இது தான், ஆரவ் வெளியிட்ட தகவல் - அதிர்ச்சியான ஓவியா ஆர்மி.!
சத்தியமா அது உண்மை இல்லை, நம்பாதீங்க - ஓவியா புலம்பல்.!
நயன்தாராவையே பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்த பிரபல நாயகி- யார் தெரியுமா?
களவாணி 2 படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ்
ஓவியாவுக்காக சிவகார்த்திகேயன் செய்த வேலை - புகைப்படத்தை பாருங்க.!
சிம்புவை கொஞ்சம் நிம்மதியா விடுங்க, அவர் பாவம் - மெகா பேமஸ் நடிகை வேண்டுகோள்.!
சிம்பு-ஓவியா திருமணம் முடிந்துவிட்டதா?- அவர்களே வெளியிட்ட தகவல்
எனக்கு ஓவியாவுடன் திருமணம் முடிந்து விட்டது - சிம்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions