சண்டமாருதம் 350 தியேட்டர்களில் ரிலீஸ்: சென்னை சிட்டி ஏரியாவை வாங்கினார் தாணு

Bookmark and Share

சண்டமாருதம் 350 தியேட்டர்களில் ரிலீஸ்: சென்னை சிட்டி ஏரியாவை வாங்கினார் தாணு

சரத்குமார், ஓவியா, மீரா நந்தன் நடித்துள்ள சண்டமாருதம் படம் வருகிற 20ந் தேதி வெளிவருகிறது. தமிழ்நாடு முழுவதும் 250 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

இதுகுறித்து சரத்குமார் கூறியதாவது:

முதன் முதலாக நானே கதை, திரைக்கதை எழுதியிருக்கும் படம் சண்டமாருதம். நீண்ட நாள் என் மனதில் இருந்த கதை இப்போது சினிமாவாகி இருக்கிறது. பணத்துக்காக எதையும் செய்யும் ஒரு வில்லன்.

பணத்தை கால்தூசுக்கு சமமாக கருதும் நேர்மையான போலீஸ் அதிகாரி, இந்த இருவருக்கும் இடையே உள்ள மோதல்தான் கதை. என்கவுண்டர் போலீஸ் அதிகாரியை நாடு பாராட்டினாலும், அவரது குடும்பமும், குழந்தையும் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பது இதுவரை சொல்லப்படாத விஷயம்.

நான் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறேன். 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வில்லனாகி இருக்கிறேன். நான், ராதிகா, லிஸ்பன் ஸ்டீபன் இணைந்து தயாரித்திருக்கிறோம்.

படத்தை பார்த்த பலரும் ஆர்வமுடன் வாங்கி இருக்கிறார்கள். கலைப்புலி எஸ்.தாணு சென்னை சிட்டி ஏரியாவை வாங்கி இருக்கிறார். தமிழ்நாட்டில் 250 தியேட்டர்களிலும் மற்ற மாநிலங்களில் 100 தியேட்டரிலும் வெளிவருகிறது. ஆந்திராவில் அடுத்த வாரம் ரிலீசாகிறது. என்றார்.


Post your comment





Related News
சண்டமாருதம் 70 தியேட்டர்கள் அதிகரிப்பு: யூனிட்டுக்கு ட்ரீட் கொடுக்கிறார் சரத்குமார்
சண்டமாருதம் திருட்டு விசிடி ரிலீஸ்: சரத்குமார் போலீசில் புகார்
வெற்றிகரமாக 390 திரையரங்குகளில் சண்டமாருதம்
வில்லன் வேடத்தில் நடித்தது ஏன்?: சரத்குமார் பேட்டி
தண்ணீர் கேன் விற்கும் சரத்குமார்!
ஓவியாவின் கோபம்!
சண்டமாருதம் 20ந் தேதி ரிலீஸ்
சண்டமாருதம் படத்தில் ஆபாச வசனங்கள்!
“சண்டமாருதம் “ படத்துக்காக 32 மணிநேரம் தொடர்ந்து நடித்த சரத்குமார்
கைவிட்ட சண்டமாருதம் ; கைகொடுத்த நிலா நகர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions