சண்டமாருதம் திருட்டு விசிடி ரிலீஸ்: சரத்குமார் போலீசில் புகார்

Bookmark and Share

சண்டமாருதம் திருட்டு விசிடி ரிலீஸ்: சரத்குமார் போலீசில் புகார்

சரத்குமார் தயாரித்து நடித்துள்ள சண்டமாருதம் கடந்த 20ந் தேதி வெளிவந்தது. அதனுடன் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படமும் வெளிவந்தது. ரிலீசான மறுநாளே இரண்டு படங்களின் திருட்டு விசிடியும் விற்பனைக்கு வந்து விட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரத்குமார் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, செயலாளர் பி.எல்.தேனப்பன், துணைத் தலைவர் கதிரேசன், பொருளாளர் சத்யஜோதி தியாகராஜன் ஆகியோருடன் திருட்டு விசிடி தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஜெயலட்சுமியை சந்தித்து புகார் அளித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

திருட்டு விசிடி திரைப்படத்துறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தபோதும் கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சண்டமாருதம் மட்டுமல்ல எந்த புதிய படம் வந்தாலும் திருட்டு விசிடி வந்து விடுகிறது. இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விடுகிறது. இதன் மீது தீவிர நடவடிக்கை எடுக்கும்படி கேட்டிருக்கிறோம். என்றார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions