குத்து பாடலுக்கு நடனம் ஆடும் காதல் சந்தியா

Bookmark and Share

குத்து பாடலுக்கு நடனம் ஆடும் காதல் சந்தியா

‘காதல்’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் சந்தியா. அவருக்கு பெயர் சொல்லும் படமாக அது இருந்ததால் ‘காதல்’ சந்தியா என்று அழைக்கப்பட்டார். சில படங்களில் நடித்தார். என்றாலும் எதிர்பார்த்தபடி அவருக்கு படங்கள் அமையவில்லை.

இந்நிலையில், தற்போது நரேன், சூரி, சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கத்துக்குட்டி’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகனுக்கு ஜோடியாகவோ படத்தின் முக்கிய கதாபாத்திரமாகவோ இவர் நடிக்கவில்லை. சூரியுடன் போட்டி போட்டு ஆடும் ஒரேயொரு குத்துப்பாட்டுக்கு மட்டும் ஆடி இருக்கிறார்.

‘சிக்கன் நான் இல்லடா. சொக்கன் நீ இல்லடா. மீனாட்சி சிக்காதுடா’ என்ற பாடலுக்கு சூரி மற்றும் நடன குழுவினருடன் காதல் சந்தியாவும் சேர்த்து ஆடி அசத்தி இருக்கிறார். இந்த நடன காட்சி ‘கத்துக்குட்டி’ படத்தில் மிகவும் ரசிக்கும் விதமாக வந்து இருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.


Post your comment





Related News
தெய்வ மகள் சத்யாவுக்கா இப்படியொரு நிலைமை - அதிர்ச்சி தகவல்.!
நானும் பாலியல் கொடுமைக்கு ஆளானேன்: காதல் சந்தியா பரபரப்பு புகார்
பாலியல் தொல்லை: வரலட்சுமியை அடுத்து நடிகை சந்தியா பகீர் தகவல்
எனது இமேஜை டேமேஜ் ஆக்கிவிட்டார் சந்தானம் -நடிகை சந்தியா புலம்பல்
நடிகை சந்தியாவால் எனக்கு நஷ்டம்.. ‘மாயை’ பட தயாரிப்பாளர் புகார்.
காதல் படத்தில் பரத்துக்கு வாய்ப்புக் கிடத்தது எப்படி ..?
காதல்' சந்தியாவுக்கு திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions