அதர்வாவின் சண்டி வீரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Bookmark and Share

அதர்வாவின் சண்டி வீரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

‘பரதேசி’ படத்தின் இயக்கத்திற்கு பிறகு பாலா, மிஸ்கின் இயக்கத்தில் உருவான ‘பிசாசு’ படத்தை தனது சொந்த நிறுவனமான பி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார். இப்படத்தைத் தொடர்ந்து தற்போது ‘சண்டி வீரன்’ என்ற படத்தையும் தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

அதர்வா- ஆனந்தி நடிக்கும் இப்படத்தை ‘களவாணி’, ‘வாகை சூடவா’ ஆகிய படங்களை இயக்கிய சற்குணம் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடித்துள்ளனர். காதலர் தினத்தை முன்னிட்டு இன்று இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அதர்வா வேட்டி பனியனுடன் கையில் அருவா வைத்து கோபத்துடன் நிற்கிறார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இப்படத்தின் இசையை விரைவில் வெளியிடவுள்ளனர். பாலா தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பாக எம்.எஸ்.சரவணன் வெளியிடுகிறார்.  


Post your comment





Related News
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
நான் சின்ன பொண்ணுங்க..... 'மதுரைவீரன்'மீனாட்சி
மதுரவீரன் படத்தில் தளபதி விஜய் - வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்.!
ஜல்லிகட்டு பற்றி நாம் அறியாத பல விஷயங்களை "மதுரவீரன்" பேசும் – சண்முகபாண்டியன்
பிப்ரவரி-2ல் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸா? - உங்க சாய்ஸ் எது?
“மதுரவீரன்” ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்லாமல் அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே இருக்கும் – இயக்குநர் P.G. முத்தையா
`மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions