பாலா அழைத்ததும் கதை கேட்காமல் சண்டி வீரனில் நடித்தேன்: அதர்வா பேச்சு

Bookmark and Share

பாலா அழைத்ததும் கதை கேட்காமல் சண்டி வீரனில் நடித்தேன்: அதர்வா பேச்சு

சற்குணம் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘சண்டி வீரன்’. இதில் அதர்வா நாயகனாகவும், கயல் ஆனந்தி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் பாலா இப்படத்தை தயாரித்திருக்கிறார். ஸ்ரீகிரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் அதர்வா, கயல் ஆனந்தி, இயக்குனர் சற்குணம், ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனர் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதில்,

இயக்குனர் பேசும்போது, ‘நான் இயக்கிய ‘வாகைச்சூடவா’, ‘களவாணி’ ஆகிய படங்களின் வரிசையில் ‘சண்டி வீரன்’ படம் இருக்கும். அனைவரும் ரசிக்கும் வகையில் பொழுது போக்கு படமாக உருவாக்கியிருக்கிறேன். இப்படத்தில் கேரள நடிகர் லால் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சண்டகோழி படத்திற்குப் பிறகு லால் நடிகருக்கு பேர் சொல்லும் படமாக இப்படம் அமையும். முதலில் நான் பாலாவிடம் கதையை சொன்னேன். அவர் கதையை கேட்டு நல்ல இருக்கு என்று சொன்னார்.

பின்னர் கதாநாயகனாக அதர்வாவை நடிக்க வைக்கலாம் என்று நினைக்கிறேன் என்று சொன்னேன். நல்லது என்று கூறி இப்படத்தை நானே தயாரிக்கிறேன் என்றார். கயல் படத்தை பார்த்து ஆனந்தியை தேர்வு செய்தேன்’ என்றார்.

அதர்வா பேசும்போது, ‘எனக்கு இயக்குனர் பாலா போன் செய்து உடனே பார்க்க வேண்டும் என்று அழைத்தார். நான் உடனே அவரை சந்திக்க வந்தேன். கதை ஒன்று கேட்டேன். அதில் நீ நடிக்க வேண்டும் என்று கூறினார்.

நானும் கதை கேட்காமல் சரி என்று சொன்னேன். அதன் பிறகுதான் தெரியும் சற்குணம்தான் இப்படத்தை இயக்க போகிறார் என்று. ‘களவாணி’ படத்தை பார்த்து சற்குணம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது தற்போது நிறைவேறியுள்ளது. இப்படத்தில் நான் கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறேன். கிராமத்து பின்னணியில் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது’ என்றார்.

கயல் ஆனந்தி பேசும்போது, ‘நான் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். சற்குணம் இயக்கத்தில் நடித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது’ என்றார்.

‘சண்டி வீரன்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் 7ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.


Post your comment





Related News
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
நான் சின்ன பொண்ணுங்க..... 'மதுரைவீரன்'மீனாட்சி
மதுரவீரன் படத்தில் தளபதி விஜய் - வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்.!
ஜல்லிகட்டு பற்றி நாம் அறியாத பல விஷயங்களை "மதுரவீரன்" பேசும் – சண்முகபாண்டியன்
பிப்ரவரி-2ல் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸா? - உங்க சாய்ஸ் எது?
“மதுரவீரன்” ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்லாமல் அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே இருக்கும் – இயக்குநர் P.G. முத்தையா
`மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions